ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், விலை 400ரூ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய சே.சாதிக், தனது விரிவான வரலாற்றை ஏற்கனவே இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். தற்போது மூன்றாம் பாகமாக வெளியாகி உள்ள இந்த நூலில், அவர் மேல் படிப்புக்காக சென்னையில் இருந்து கனடா நாட்டுக்கு சென்றது முதல் நடைபெற்ற நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. கனடாவில் அவரது வாழ்க்கை, அவ்வப்போது விமான நிலையங்களில் சந்தித்த அனுபவங்கள், சென்னை வந்து பதவி ஏற்றது. பல தடைகளையும் தாண்டி வெற்றி பெற்ற […]

Read more

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா,  மஹதி, யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக்.216, விலை ரூ.170. முஸ்லிம்களின் ஆட்சி பற்றியும், அவர்கள் நடத்திய போர்கள் பற்றியும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் நிலையில், கடந்த 60 ஆண்டுகளாக நூலாசிரியர் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உருவாயிருக்கிறது. இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட இந்நூலில் முதல் பாகத்தில் கான்சாகிப், திப்புசுல்தான், கேரளாவில் நடந்த மாப்பிள்ளைமார் புரட்சி பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பாகத்தில் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி உருவானவிதம், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்கள் பாண்டிய மன்னர் ஆட்சிக்குப் பிறகு, பல […]

Read more

காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப்

காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப், செ. திவான், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக். 316, விலை 200ரூ. பாட்டும் நானே பாடலை எழுதியது யார்? பொன்னான வாழ்வே மண்ணாகி போமா, நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே எனும் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் நம் மனக்கண் முன் வருபவர் கா. மு. ஷெரீப். அவரை திரைப்பட பாடலாசிரியர் என்ற அளவில் மட்டும் தெரிந்து வைத்திருக்கும் இக்கால தலைமுறையினருக்கு, […]

Read more