ஒரு துணை வேந்தரின் கதை
ஒரு துணை வேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், விலை 400ரூ.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய சே.சாதிக், தனது விரிவான வரலாற்றை ஏற்கனவே இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். தற்போது மூன்றாம் பாகமாக வெளியாகி உள்ள இந்த நூலில், அவர் மேல் படிப்புக்காக சென்னையில் இருந்து கனடா நாட்டுக்கு சென்றது முதல் நடைபெற்ற நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன.
கனடாவில் அவரது வாழ்க்கை, அவ்வப்போது விமான நிலையங்களில் சந்தித்த அனுபவங்கள், சென்னை வந்து பதவி ஏற்றது. பல தடைகளையும் தாண்டி வெற்றி பெற்ற வரலாறு ஆகியவற்றுடன் சென்னை எம்.ஐ.டி. இயக்குனராகப் பதவி ஏற்றது வரையிலான சம்பவங்களை, அனைவரும் படிக்கும் வகையில் சுவைபட தொகுத்துத் தந்து இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 13/3/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026878.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818