தமிழக தொல்லியல் ஆய்வுகள்

தமிழக தொல்லியல் ஆய்வுகள்,  செ.இராசு, வேலா வெளியீட்டகம், பக்.224, விலை ரூ.175. வரலாற்று ஆய்வுகளுக்கு ஆதாரமாகப் பயன்படுபவை கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள். இந்நூலில் இடம் பெற்றுள்ள 27 கட்டுரைகளும் இந்த வரலாற்று ஆதாரங்கள் குறித்த தகவல்களையும், அந்த ஆதாரங்களில் இருந்து நாம் கண்டறியக் கூடிய வரலாற்று உண்மைகளையும் விரிவாக விளக்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில், குறிப்பாக உத்தரமேரூரில் கிராம சபைக்குத் தேர்தல் நடந்துள்ளது. கிராம சபைத் தேர்தல் பற்றிய விவரங்களை உத்தரமேரூர், பிள்ளைப் பாக்கம், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல், தஞ்சை மாவட்டம் செந்தலை, […]

Read more

எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து

எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து, ம.வெங்கடேசன், கிழக்கு பதிப்பகம் ம.வெங்கடேசனின் சமீபத்தைய புத்தகம் ‘எம்.ஜி.ஆர். என்கிற ஹிந்து’. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகம் முனைந்ததை ஒட்டி ஏற்பட்ட ஆய்வில் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் ம.வெங்கடேசன். சில புத்தகங்கள் உணர்வுப் பூர்வமாக இருக்கும். சில புத்தகங்கள் வெறும் தகவல்களாக இருக்கும். இப்புத்தகம், ம.வெங்கடேசனின் மற்ற புத்தகங்களான ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’, ‘தலித்துகளுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி’ போன்ற புத்தகங்களைப் போலவே, மிகவும் விவரமாக தரவுகளுடன் எழுதப்பட்ட புத்தகம். ஹிந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயர் […]

Read more

பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும்

பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும்,  ப. திருஞானசம்பந்தம், நெய்தல்பதிப்பகம், பக்.228, விலை ரூ.200 யாப்பிலக்கணத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட எட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ் யாப்பியல் குறித்த அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில், பதினெண்கீழ்க்கணக்கு யாப்பியல் ஆய்வு வரலாறு, திருக்குறளில் யாப்பியல் குறித்து அயலக, தமிழக அறிஞர்களின் ஆய்வுகள், கீழ்க்கணக்கு இலக்கியங்களில் உள்ள புதுவகையான இன்னிசை வெண்பாக்கள், தொடை நலன்கள், தமிழில் உள்ள ஓரெதுகையின் வரலாறு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பழந்தமிழ் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் முதலியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. களவழி நாற்பதில் இடம்பெறுகின்ற ஆறடிகளிலான […]

Read more

காச்சர் கோச்சர்

காச்சர் கோச்சர்,  கன்னட மூலம்: விவேக் ஷான்பாக், தமிழில்: கே.நல்லதம்பி, காலச்சுவடு பதிப்பகம், பக்.104, விலை ரூ.125. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் வெவ்வேறு உலகங்களைச் சித்திரிக்கும் நாவல். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இருந்த சிந்தனை, வாழ்க்கைமுறை, மனோபாவம், பழக்க, வழக்கங்கள் எல்லாம், அவர்களுக்கு வசதி வந்த பிறகு மாறிப் போய்விடுகிறது. வேலைக்குப் போய் தனது முதல் சம்பளத்தில் அம்மாவுக்குப் பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மகன், வசதி வந்த பிறகு சொந்தத் தொழிலைக் கூட […]

Read more

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள்

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள், சி.பி.சரவணன், வி கேன் புக்ஸ், பக்.174, விலை ரூ.170. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டன. மெட்ராஸ் மைசூர் மாகாண அரசுகளுக்கிடையில் கி.பி. 1892, 1924, 1929 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், மைசூர், தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளுக்கிடையில் 1972 இல் ஏற்பட்ட ஒப்பந்தம் ஆகியவை பற்றி இந்நூல் விரிவாகக் கூறியிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் காவிரிப் படுகையின் மகசூல் மற்றும் நீர்ப் பயன்பாடு பற்றிய உண்மை விவரங்களைச் சேகரிப்பதற்காக […]

Read more

சங்கப் பனுவல்கள் – தொகுப்பு மரபு – திணை மரபு

சங்கப் பனுவல்கள் – தொகுப்பு மரபு – திணை மரபு, சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம், பக்.136, விலை ரூ.135. ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுபவை கி.மு.550 முதல் கி.பி.600 வரை படைக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. பல்வேறு காலங்களின் பல்வேறு வாழ்நிலைகளைச் சித்திரிக்கும் இந்தப் பாடல்களில் கூறப்படுபவை, தொடக்க காலத்தில் படைக்கப்பட்ட பாடல்களிலிருந்து கடைசியில் படைக்கப்பட்ட பாடல் வரை ஒன்றாகவே இருக்க வாய்ப்பில்லை. மேலும் அவற்றிற்கு உரையெழுதியவர்கள், பதிப்பித்தவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தின், அவர்களின் கருத்துநிலையில் இருந்துதான் சங்க […]

Read more

இளசையாரின் இலக்கிய பயணம்

இளசையாரின் இலக்கிய பயணம், முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, புகழ் பதிப்பகம், பக். 136. படைப்பாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நுாலாசிரியர், ஆராய்ச்சியாளர், கிருபானந்த வாரியாரால் பாராட்டப்பட்ட நகைச்சுவை மாமன்னர், ஆன்மிக அறிஞர், அகில இந்திய வானொலி இயக்குனர், கவிஞர், நாடக ஆசிரியர், மகாகவி பாரதியாக வேடமிட்டுத் தோன்றும் நடிகர், பல வெளிநாடுகளில் தமிழின் புகழைப் பரப்பியவர் போன்ற பன்முகம் கொண்ட இலக்கியவாதியின் சுயசரிதையைக் கூறுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 8/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள், ஏகவன், அமானி பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 40ரூ. உழைக்கும் கரங்கள், ஹாஜியார் வீட்டுக் கல்யாணம், ஏழை வரி, ஹலால், நோன்பு கஞ்சி, பெருநாள் காசு, எல்லா புகழும் இறைவனுக்கே, கொழுக்கட்டை, இறை இல்லம், இறைவனிடம் கையேந்துங்கள்’ ஆகிய சிறுகதைகள், நபி மொழிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பிலும், பொருளாதார நிலையிலும் பின்தங்கியிருக்கும் முஸ்லிம் சமுதாயம் முன்னேற, கல்வி ஒன்று தான் கருவியாக இருக்க முடியும் என்பதை உணர்த்தும் சிறுகதைகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 8/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம், என்.ஸ்ரீநிவாசன், கண்ணப்பன் பதிப்பகம், பக்.496, விலை 300ரூ. நம் அன்றாட வாழ்வில் பார்க்கும், கேட்கும், உணரும் செயலாற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு தான் இந்நுால் என விளக்கம் தருகிறது. தண்ணீர் புவியின் உயிரோட்டம் இது. புவியின் பரப்பளவில் பூமிக்கு நீர்க்கோளம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு உயிர்ப்போராட்டம் கொடுக்கும் இயற்கை அமுதம் என்ற விளக்கமும் அதில் உள்ள தகவல்கள் உள்ளன. ‘ஆல்கே’ எனும் கடற்பாசியினம் தோன்றி, 310 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்ற கேள்வி இப்போது எழுவது […]

Read more

நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன், ஆங்கில மூலம் உம்பர்ட்டோ ஈகோ, தமிழில் க.பஞ்சாங்கம், அருட்செல்வம் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 128, விலை 125ரூ. இன்று உலகில் புகழ் பெற்ற முதல் இருபது அறிவு ஜீவிகளில் ஒருவர் உம்பர்ட்டோ ஈகோ. நாவலாசிரியர், கட்டுரையாளர், பண்பாட்டாய்வாளர் என, பன்முகத்தன்மை கொண்ட இவர், 30க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். அவரது நுாலிலிருந்து, நான் எப்படி எழுதுகிறேன், நடை, இலக்கியத்தின் சில செயல்பாடுகள், அரிஸ்டாட்டிலின் கவிதையிலும் நாமும், கம்போரேசி ரத்தம், உடல், வாழ்வு, பொதுவுடைமை அறிக்கையின் நடையை […]

Read more
1 3 4 5 6 7 8