டிஜிட்டல் மாஃபியா

டிஜிட்டல் மாஃபியா, வினோத்குமார் ஆறுமுகம், வி கேன் புக்ஸ், பக். 132, விலை 120ரூ. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பின்னால் ஒரு ரகசிய உலகம் இயங்கி வருகிறது. அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த காலங்கள் சென்று, புதுப்புது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரத்தை வைத்து, சாமானியர் பலரும் சமூக வலைதளங்களைக் கொண்டாடுகின்றனர். ஆனால், பதிவிடப்படும் அரிய தகவல்கள் முதல், அந்தரங்க பதிவுகள் வரை, அனைத்தும் ரகசியமாகக் கூகுளின் கழுகுப்பார்வையால் கண்காணிக்கப்படுகின்றன. இலவசச் செயலி என்றதும் இறக்கி எடுத்துக் கொள்வதும், ஆசை வார்த்தைக்கெல்லாம், ‘ஆமாம்’ […]

Read more

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள்

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள், சி.பி.சரவணன், வி கேன் புக்ஸ், பக்.174, விலை ரூ.170. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டன. மெட்ராஸ் மைசூர் மாகாண அரசுகளுக்கிடையில் கி.பி. 1892, 1924, 1929 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், மைசூர், தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளுக்கிடையில் 1972 இல் ஏற்பட்ட ஒப்பந்தம் ஆகியவை பற்றி இந்நூல் விரிவாகக் கூறியிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் காவிரிப் படுகையின் மகசூல் மற்றும் நீர்ப் பயன்பாடு பற்றிய உண்மை விவரங்களைச் சேகரிப்பதற்காக […]

Read more

காவிரி ஒப்பந்தம்: புதைந்த உண்மைகள்

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள், சி.பி.சரவணன், வி கேன் புக்ஸ், விலை 170ரூ. தமிழகத்தில் கோடை வெப்பத்தை விட அனலெனத் தகிக்கும் பிரச்சினை ஒன்று உண்டென்றால் அது காவிரி தொடர்பானதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காட்டிவரும் மெத்தனமும், உரிமைகளைப் போராடிப் பெற வேண்டிய தமிழக அரசின் மௌனமான இருப்பும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பெரும் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. காவிரி ஒப்பந்தம் தொடர்பாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப் பாதுகாப்புகள் குறித்து மிக விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். நன்றி: தி இந்து, 12/5/2018. […]

Read more

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி, வி கேன் புக்ஸ், விலை 90ரூ. மறைந்த முதல் – அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அதே சமயம் மனதைத் தொடும்படியும் விவரிக்கும் நூல். ஜெயலலிதாவின் இளமைப்பருவம், திரைப்படத் துறையில் பெற்ற தொடர் வெற்றிகள், அரசியல் பிரவேசம், முதல் – அமைச்சர் பதவி, அண்மையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மறைவு… இப்படி, ஜெயலலிதா வாழ்க்கை முழுவதையும் இந்த 108 பக்க நூலில் ஒரு நாவலுக்குள்ள விறுவிறுப்புடன் எழுதியுள்ளார், குகன். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும், ஜெயலலிதா மீது பற்று கொண்டவர்களுக்கும் இது […]

Read more