ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி
ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி, வி கேன் புக்ஸ், விலை 90ரூ.
மறைந்த முதல் – அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அதே சமயம் மனதைத் தொடும்படியும் விவரிக்கும் நூல்.
ஜெயலலிதாவின் இளமைப்பருவம், திரைப்படத் துறையில் பெற்ற தொடர் வெற்றிகள், அரசியல் பிரவேசம், முதல் – அமைச்சர் பதவி, அண்மையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மறைவு…
இப்படி, ஜெயலலிதா வாழ்க்கை முழுவதையும் இந்த 108 பக்க நூலில் ஒரு நாவலுக்குள்ள விறுவிறுப்புடன் எழுதியுள்ளார், குகன். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும், ஜெயலலிதா மீது பற்று கொண்டவர்களுக்கும் இது அருமையான கையேடு.
நன்றி: தினத்தந்தி, 15/3/2017.