திருக்கேதீச்சரம் சிவபூமி

திருக்கேதீச்சரம் சிவபூமி, மறவன்புலவு க.சச்சிதானந்தன், காந்தகளம், பக்.72, விலை 80ரூ. தல வரலாற்றில் பண்டைய தமிழ்ச் சொற்களின் மூலம் ஆசிரியர் வாசகர்களை வியக்கச் செய்கிறார். கேது முனிவர் வழிபட்ட சிவன் பற்றிய சிறப்பைச் சொல்கிறது இந்நுால். காலக் கணக்கை திருவள்ளுவர் ஆண்டு, தி.பி., – தி.மு., என புதியதாய் விளக்கம் தருகிறார். மகா துவட்டாபுரம் முதல் கத்தோலிக்கர் காலம் வரை வாழ்ந்த மன்னர்கள் மற்றும் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளைச் சொல்கிறது இந்நுால். எளிய விலையில் புராதன சொற்கள் அடங்கிய குறுநுால் எனலாம். நன்றி: தினமலர், […]

Read more

மதுரை வீரன் கதைகள் மறுபார்வை

மதுரை வீரன் கதைகள் மறுபார்வை, சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.290, விலை 230ரூ. வீரமும், விவேகமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவன் மதுரை வீரன். இவன், காசியிலே பிறந்து பொம்மண சீமையிலே வளர்ந்து, மதுரையிலே தெய்வமாகிறான். மதுரையில் தெய்வமானதால் இவன் மதுரை வீரனாகிறான். சாதாரண மனிதனைப் போலவே மதுரை வீரனுக்கும் காமம், கொள்ளை, கொலை ஆகிய தீய பண்புகள் இருந்துள்ளன. இவனைப் பற்றிய கதையை தற்காலத்தில் பரப்பிய பெருமை திரைப்படத்தையே சாரும். எனினும், மதுரை வீரனைக் கதைப் பாடல்களும், வில்லுப் பாடல்களும், கூத்துப் பாடல்களும், கோலாட்டப் பாடல்களும் […]

Read more

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள்

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், பக்.223, விலை 250ரூ. செல்லமுத்து வருவாய் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், கவிஞர் என்ற எழுத்து பணியில் இருந்து ஓய்வு பெறாமல் தொடர்கிறார். காலத்தால் அழியாத என்.எஸ்.கிருஷ்ணனின் கலையுலக பயணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர் பாடி, நடித்த, 176 பாடல்களையும், மதுரம் அம்மையாருடன் இணைந்து நடித்த, 74 படங்களையும் நுால் வழியே தொகுத்து அளித்ததன் மூலம் சினிமா மீதும், கலைவாணர் மீதும் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது. கலை வித்தகனின் நடிப்பு, குணம், […]

Read more

புலம்பெயர்ந்த பறவைகள்

புலம்பெயர்ந்த பறவைகள், டாக்டர் டி.எம்.ரகுராம், திசை எட்டும் வெளியீடு, பக்.76, விலை 60ரூ. உலகப் புகழ் பெற்ற மூத்த கவிஞர் சச்சிதானந்தன் துவங்கி, இளம் கவிஞர்கள் வரை பலரின் படைப்புகள் அடங்கிய மலையாள மொழிக் கவிதைகளின் தொகுப்பு இந்நுால். ‘வயல் வெளியின் மடியில் கனவுகளால் வலைகள் பின்னி, காற்றுடன் வேடிக்கை பேசி செடியுடன் சேர்ந்து நின்ற காலம். என் மெய்யும் மனமும் அன்று மிருதுவாய் இருந்தது. ஈரத்தின் துடிப்பு செடியிலிருந்து வேறுபட்டு எங்கோ தொலைதுாரம் சென்றடைவதற்குள், காற்று என் ஜீவனின் ஆதாரமான நீரனைத்தும் வற்ற […]

Read more

செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியச்கூறுகள்

செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியச்கூறுகள், வே.நிர்மலர் செல்வி, நெய்தல் பதிப்பகம், பக். 272, விலை 300ரூ. ஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன், வாய்மொழி இலக்கியமே அனைத்து மொழியிலும் தோன்றியிருக்கும். அந்த வகையில் காலங்காலமாக வாய்மொழியில் நிலைபெற்ற இலக்கியங்களே நாட்டுப்புற இலக்கியங்கள் என அச்சாக்கம் பெற்றன. இதுவே, தனிப்பெரும் துறையாக உருப்பெற்றது. நாட்டுப்புறவியல் தொடர்பான பல கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற பலரது சிந்தனைகளை இந்நுால் உள்ளடக்கியுள்ளது. நுாலில் மொத்தம், 27 கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலான ஒப்பீட்டு நிலையிலானவை. இவை, செவ்விலக்கியங்களில் நாட்டுப்புறக் […]

Read more

மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன், ஜெயசூர்ய குமாரி, சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை 250ரூ. சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில், 20 வயது இளைஞர்கள் சமூக வலைதள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள் செய்து கொண்டிருக்க, 18ம் நுாற்றாண்டில் அதே இளம் வயதில் ஒரு ஒப்பற்ற மாவீரனாக விளங்கிய நெப்போலியனின் நிகரற்ற வரலாறே இந்நுால்! பிரெஞ்சின் சூழ்ச்சியாலும், ஆயுத பலத்தாலும், கொடுமைகளாலும் கொந்தளித்திருந்த கார்சிகாவில், கருவில் குழந்தையைச் சுமந்து கணவனோடு போர்க்களத்தில் இருந்த வீரப்பெண்மணி வெட்டீசியாவுக்கு, ஆகஸ்ட் 15, 1769ம் ஆண்டு பிறந்த சரித்திர நாயகன் தான் […]

Read more

உயிர்ச்சுழி

உயிர்ச்சுழி, பாரதிபாலன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.192, விலை 180ரூ. எந்த வீட்டில் இருக்கிறது இப்போது திண்ணை. புழுதி அடங்க எந்த வாசலும் தெளிக்கப் படுவதில்லை. புள்ளியிட்ட கோலமின்றி புழுதி அடித்துப் பூத்துக் கிடக்கிறது. ‘செம்மண் கோலமோ, மாக்கோலமோ, நெளி கோலமோ நெஞ்சில் மட்டும் தான். ஸ்டிக்கரிலே எல்லாம் வந்தாச்சு கிழித்து எறிவதற்குச் சவுகரியம்’ என்று பண்பாட்டுச் சிதைவை ஆதங்கத்தோடு சுட்டி, ‘நம்முடைய அடையாளங்களை நம் தாய் மண்ணில் இன்னமும் தோண்டி எடுக்க முடியும்’ என்ற நுாலாசிரியர், பல்வேறு இதழ்களில் வெளியான, 16 சிறுகதைகள் […]

Read more

அலர்ஜி

அலர்ஜி, டாக்டர் கு.கணேசன், கிழக்கு பதிப்பகம், பக். 135, விலை 140ரூ. டாக்டர் ஆன நுாலாசிரியர் தமிழ் நுாலாக இதைப் படைத்திருப்பது சிறப்பாகும், உடலில் ஒவ்வாத கிருமிகளை வெளியேற்றும் முறையை சுருக்கமாக அலர்ஜி எனலாம். இதற்கான மருத்துவ விளக்கங்களை தரும் ஆசிரியர், சாதாரணமாக காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருந்துகளை இஷ்டப்படி வாங்கிச் சாப்பிட்டு ஒவ்வாமையை வரவேற்கக்கூடாது என்கிறார். அழகுசாதனப் பொருட்கள், அதிக வெயிலில் அலைச்சல் உட்பட பல அலர்ஜி கூறுகளை ஏற்படுத்தும் என்ற அவரது கருத்துக்கள் உட்பட பல விஷயங்கள் பலருக்கும் பயன்படும். நன்றி: […]

Read more

நம்மாழ்வார்

நம்மாழ்வார், முகிலை ராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 96, விலை 100ரூ. தற்போது துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்குருகூரில் தோன்றியவர் நம்மாழ்வார் என்னும் மாறன். இவரது காலத்திற்குப் பின், இந்த ஊர் ஆழ்வார்திருநகரி எனப் போற்றப்படுகிறது. குறுநில மன்னனான காரிக்கு மகனாகப் பிறந்தும், அரச வாழ்க்கையைத் துறந்து, திருக்குருகூரில் உள்ள ஆதிநாதர் கோவிலில் நிற்கும் புளிய மரத்தடியில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். யாரிடமும் பேசாமலும், எந்தச் செயலிலும் ஈடுபடாமலும் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரைப் பார்த்ததும் அசைந்து கொடுத்து அவரது கேள்விக்குத் தத்துவ விளக்கமாகப் […]

Read more

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள், சி.வீராகு, சத்யா பதிப்பகம், பக். 178, விலை 100ரூ. உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றனர். ஆனால், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் சாதனையாளராகத் திகழ்பவர்கள் ஒரு சிலரே. அந்தச் சாதனையாளர்களைப் பற்றிய தொகுப்பே இந்நுால். சாதனையாளர்களை துறை அடிப்படையில், அறிவியல், சட்டம், இயல், இசை, நாடகம், வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள், புரட்சியாளர்கள், நீச்சல், மனிதாபிமானம், சிந்தனையாளர் எனப் பகுத்து எளிமையாகவும், அழகாகவும், அவர்களின் சாதனைகளை எடுத்துரைக்கிறது இந்நுால். ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும், தலைவராகவும் திகழ்ந்த அப்துல் கலாமில் துவங்கி, கிரேக்க நாட்டு பிளேட்டோவில் முடிகிறது […]

Read more
1 2 3 4 6