புலம்பெயர்ந்த பறவைகள்
புலம்பெயர்ந்த பறவைகள், டாக்டர் டி.எம்.ரகுராம், திசை எட்டும் வெளியீடு, பக்.76, விலை 60ரூ.
உலகப் புகழ் பெற்ற மூத்த கவிஞர் சச்சிதானந்தன் துவங்கி, இளம் கவிஞர்கள் வரை பலரின் படைப்புகள் அடங்கிய மலையாள மொழிக் கவிதைகளின் தொகுப்பு இந்நுால்.
‘வயல் வெளியின் மடியில் கனவுகளால் வலைகள் பின்னி, காற்றுடன் வேடிக்கை பேசி செடியுடன் சேர்ந்து நின்ற காலம். என் மெய்யும் மனமும் அன்று மிருதுவாய் இருந்தது.
ஈரத்தின் துடிப்பு செடியிலிருந்து வேறுபட்டு எங்கோ தொலைதுாரம் சென்றடைவதற்குள், காற்று என் ஜீவனின் ஆதாரமான நீரனைத்தும் வற்ற வைத்தது’ என்ற, ‘வற்றல்’ கவிதை, வறட்சியில் பிடியில் நம் நாடு அதல பாதாளத்திற்கு செல்வதை கண்ணீர் சிந்தி வளமாக்க முயற்சிக்கிறது!
– மாசிலா ராஜகுரு
நன்றி: தினமலர், 19/1/2020
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818