கேள்வி நேரம்

கேள்வி நேரம், ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.110 இது பொது அறிவுக் கேள்வி – பதில் புத்தகம் என்பதைத் தாண்டி, இந்தத் தகவல்களின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களும் பதில்களில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. வெறும் தகவல்களாக மட்டும் அல்லாமல், அறிவை விரிவாக்கிக்கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும். நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிரமிள் படைப்புகள்

பிரமிள் படைப்புகள், (6 தொகுதிகள்), லயம் – பிரமிள் அறக்கட்டளை வெளியீடு, மொத்த விலை: ரூ.3,400 படைப்பூக்கம், விமர்சனம் இரண்டிலும் தமிழில் உச்சம் தொட்ட மேதைகளுள் ஒருவர் பிரமிள். கவிதைகள், கதைகள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள், பேட்டிகள், உரையாடல்கள், தமிழாக்கங்கள் என பிரமிளின் பங்களிப்புகள் முழுவதையும் ஆறு தொகுதிகளாகத் தொகுத்திருந்தார் கால சுப்ரமணியம். இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய தொகுப்புகள் இவை. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000002243.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…, பசு.கவுதமன், ரிவோல்ட் பதிப்பகம், விலை: ரூ.200. கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவம் தொடர்பான விவாதங்களில் ஏகப்பட்ட திரிபுகளும் உண்டு. அந்தச் சம்பவத்தின் பின்னுள்ள உண்மையான கள நிலவரத்தை அப்பட்டமாக முன்வைக்கும் முக்கியமான நூல்களுள் ஒன்று பசு.கவுதமன் எழுதிய ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…’ நூல். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழ் நாவல்கள்

தமிழ் நாவல்கள், பொன்னீலன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.232, விலை ரூ.220. உலகில் ஏற்படும் மாற்றங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மக்களின் மனநிலை, பண்பாடு, ஆதிக்கத்தன்மை, அடிமைத்தளை, பொருளாதாரநிலை, உணர்ச்சிகள், ரசனைகள், பழக்க, வழக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாவல்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், பன்முகத்தன்மைகளுக்கும் கூட இந்த மாற்றங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த அடிப்படையில் தமிழில் தோன்றிய முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் தொடங்கி, சமகாலத் தமிழ் நாவல்கள் வரை இந்நூல் அறிமுகம் செய்வதுடன், நாவல்களின் உள்ளடக்கம், அவை […]

Read more

வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது

வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது, பவித்ரா நந்தகுமார், மணிமேகலைப் பிரசுரம், பக்.150, விலை ரூ.100. நூலாசிரியரின் 17 சிறுகதைகளின் தொகுப்பு. நிகழ்கால வாழ்வில் ஏற்படும் யதார்த்தமான பிரச்னைகளைக் கதைக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. சிறுவயதில் செய்யாத தவறுக்குத் தன் தோழியின் வீட்டினர் தந்த தண்டனையும், அவமானமும் நடுத்தர வயதை எட்டியும் கதையின் நாயகியை வேதனைப்படுத்தி விடுகிறது. ஒரு ரயில் பயணத்தில் அவளது மன உளைச்சலுக்குத் தீர்வு கிடைக்கிறது. இதுதான் மைசூர் எக்ஸ்பிரஸின் மூன்றாவது கம்பார்ட்மென்ட் சிறுகதை. நான்கு மனித மிருகங்களால் ஓர் ஏழைப் பெண் பாலியல் […]

Read more

அம்மை & பதுங்குகுழி நாட்கள்

அம்மை & பதுங்குகுழி நாட்கள், பா.அகிலன், பரிசல் வெளியீடு, விலை: ரூ.170 ஒரு பக்கத்தில் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும், இன்னொரு பக்கம் திருப்பினால் ‘பதுங்குகுழி நாட்கள்’ கவிதைத் தொகுப்பும் என யாழ்ப்பாணக் கவிஞர் பா.அகிலனின் இரண்டு கவிதைப் பிரதிகளை ஒரே புத்தகமாகத் தலைகீழ் வடிவில் அச்சிட்டுக் கொண்டுவந்திருக்கிறது ‘பரிசல்’ பதிப்பகம். இரண்டு பிரதிகள், இரண்டு காலங்கள், இரண்டு அட்டைப்படங்கள், ஒரே புத்தகம்! இந்த வடிவமைப்பு உத்திக்காக ஒரு சபாஷ்! நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தொல்காப்பிய ஆய்வடங்கல்

தொல்காப்பிய ஆய்வடங்கல், மு.சங்கர், காவ்யா, பக்.336, விலை ரூ.340. தொல்காப்பியம் குறித்து பல்வேறு பொருண்மைகளில் 2000 முதல் 2019 வரை வெளியான 333 ஆய்வுக் கட்டுரைகள், 40 ஆய்வு நூல்கள், ஆய்வியல் நிறைஞர்(எம்.ஃபில்), முனைவர்பட்ட (பிஎச்.டி.) ஆய்வேடுகள் 58 ஆகியவை மூன்று பகுதிகளாக இந்நூலில் ஆய்வடங்கலாகியிருக்கின்றன. கட்டுரையின் தலைப்பு, எழுதியவர் பெயர், பதிப்பித்த ஆண்டு, வெளியீட்டாளர் பெயர், கட்டுரையின்-நூலின் பக்கங்கள் முதலியவற்றுடன், ஒவ்வொரு கட்டுரையும் சொல்லும் ஆய்வு முடிவை கருத்து என்கிற பெயரில் சுருக்கமாகவும்; அதனுடன் ஆய்வேட்டின் உள்ளடக்கத்தையும் தந்திருப்பது சிறப்பு. உலகத் தமிழ் […]

Read more

மதிஒளி என்றொரு மந்திரம்

மதிஒளி என்றொரு மந்திரம், ராணிமைந்தன், வானதி பதிப்பகம், பக்.272, விலை ரூ.400. ஒரு சகோதரியாக, அம்மாவாக, தெய்வத்தன்மை மிக்கவராக, தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து உதவி செய்பவராக, கவிஞராக, எழுத்தாளராக, இளம்தளிர்களின் வளர்ச்சியில் ஆர்வமிக்கவராக, சமூக அக்கறை கொண்டவராக நடமாடி வந்த மதிஒளி சரஸ்வதியின் வரலாற்றை இந்நூல் தாங்கி வந்துள்ளது. மதிஒளி சரஸ்வதி, நம்பிக்கையோடு தன்னை நாடி வந்தவர்களின் வாழ்க்கையில் சந்தோஷப் பூக்களை மலரச் செய்தது, அவருடன் பழகியவர்கள் தங்களுடைய அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துள்ளதன் மூலம் தெரிய வருகிறது. காஞ்சி மகா […]

Read more

ஆழி பெரிது

ஆழி பெரிது, வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல், அரவிந்தன் நீலகண்டன், பக்.367, விலை ரூ.330. இன்று வேத பாரம்பரியம் குறித்து அரசியல் சாயத்துடன் பல விவாதங்கள் நடைபெறுகின்றன. அவை எந்த அளவுக்கு உண்மையின் அடிப்படையில் நடைபெறுகின்றன; வேத காலம் என்பது எப்படி இருந்திருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் ஓரளவுக்கு விளக்கம் அளிக்கிறது. வேத கால அக்னி வளர்ப்பு, அஸ்வமேத யாகம், சரஸ்வதி நதி பற்றிய சர்ச்சை போன்றவற்றை விரிவாக அலசுகிறார் நூலாசிரியர். அதுபோலவே இந்திய பாரம்பரியத்தில் பெண்களுக்கு சமத்துவம் அளிக்கவில்லை […]

Read more

நடைவழி நினைவுகள்

நடைவழி நினைவுகள், சி.மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 மோகன் தனது ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more
1 2 3 4 5 6