மதிஒளி என்றொரு மந்திரம்
மதிஒளி என்றொரு மந்திரம், ராணிமைந்தன், வானதி பதிப்பகம், பக்.272, விலை ரூ.400.
ஒரு சகோதரியாக, அம்மாவாக, தெய்வத்தன்மை மிக்கவராக, தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து உதவி செய்பவராக, கவிஞராக, எழுத்தாளராக, இளம்தளிர்களின் வளர்ச்சியில் ஆர்வமிக்கவராக, சமூக அக்கறை கொண்டவராக நடமாடி வந்த மதிஒளி சரஸ்வதியின் வரலாற்றை இந்நூல் தாங்கி வந்துள்ளது.
மதிஒளி சரஸ்வதி, நம்பிக்கையோடு தன்னை நாடி வந்தவர்களின் வாழ்க்கையில் சந்தோஷப் பூக்களை மலரச் செய்தது, அவருடன் பழகியவர்கள் தங்களுடைய அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துள்ளதன் மூலம் தெரிய வருகிறது. காஞ்சி மகா பெரியவரால் அகிலாண்டேஸ்வரியாக அடையாளம் காணப்பட்டு -நடமாடும் தெய்வமாக-அதே நேரத்தில் எல்லோரிடமும் நட்பும், அன்பும், பரிவும் கொண்ட சக மனிதராக -சமுதாயத்துக்குத் தேவையான தொண்டினை தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது செய்த அவருடைய வாழ்க்கை வரலாறு அனைவரும் படித்துணர வேண்டியதாகும்.
இந்த சமுதாயத்துக்குப் பயனுள்ள பல காரியங்களைச் செய்ததோடு, தனக்கும், தன் மீது பற்றுக் கொண்டவர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படாத வகையில் யாரும் எளிதில் அணுகிப் பழகும் வண்ணம் வாழ்ந்த மதிஒளி சரஸ்வதியின் வரலாற்று நூலை வாசிப்பவர்களின் மனதில் நிம்மதி அலைகளும், தூய உணர்வுகளும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி,13/1/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818