சிறுகோட்டுப் பெரும்பழம்
சிறுகோட்டுப் பெரும்பழம், விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.250.
பாரதியார் நூற்றாண்டில் அன்னம் வெளியிட்ட’ ஆகாசம் நீல நிறம்’ தொகுதி மூலம் புதுக்கவிதையில் அழுத்தமான தடத்தைப் பதிக்கத் தொடங்கியவர் விக்ரமாதித்யன். கவிதையையே வாழ்வாகவும் கவிஞர் என்பதையே பிரதான அடையாளமாகவும் கொண்ட விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தான்’ சிறுகோட்டுப் பெரும்பழம்’. எளிய வாசகர்களும் தங்கள் வாழ்வின் பல்வேறு பருவங்கள் மற்றும் அனுபவங்களூடாக நினைவில் வைத்துக்கொள்ளும் அழகிய கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சாதாரண மக்களின் காதல், பிரிவு, ஏக்கம், இல்லாமை, நம்பிக்கை, அவநம்பிக்கை என எல்லா உணர்வுகளையும் விக்ரமாதித்யன் எளிமையாகவும் ஆழமாகவும் கவிதைகளாக்கியிருக்கிறார். கவிதை ரசிகர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்.
நன்றி: தமிழ் இந்து, 14/1/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818