ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்
ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள், குன்றில் குமார், குறிஞ்சி, பக். 176, விலை 150ரூ.
அமேசான் காட்டிற்குள் போகாதவர்கள், போக முடியாதவர்கள் இந்நூலைப் படித்தால் அதன் தன்மையை ஓரளவிற்கேனும் உணர முடியும். விசித்திரமான விலங்குகள், ஆறுகள், பாம்புகள், பழங்குடிகள் என்று நம் கண்முன்காட்டி, காட்டைப் பற்றிய ஒரு ஆய்வையும் மேற்கொண்டுள்ளார் நூலாசிரியர்.
கையை வைத்தால் சிலிர்ப்பூட்டும் ஆறும் இங்குண்டு, நொடியில் கையைப் பொசுக்கிவிடும் கொதிக்கும் ஆறுகளும் இங்குண்டு என்பது ஆச்சரியத் தகவல்.
நன்றி: குமுதம், 22/3/2017.