வெற்றி வித்துக்கள்
வெற்றி வித்துக்கள், நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக்.146, விலை ரூ.100. நூலின் தலைப்புக்கு ஏற்றவிதத்தில் படைக்கப்பட்டிருக்கும் அருமையான குறுங்கதைகளின் தொகுப்பு இந்நூல். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவை எல்லாம் சொல்லக் கூடிய விஷயங்களை நேரடியாகச் சொல்பவையாக இருக்கின்றன. அல்லது ஆலோசனை சொல்பவையாகவோ, அறிவுரை சொல்பவையாகவோதான் புரிந்து கொள்ளப்படுகின்றன. பிறரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை குறைந்துவரும் இக்காலத்தில், அத்தகைய நூல்கள் ஏற்படுத்தும் தாக்கமும் குறைவாகவே இருக்கிறது. இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, குறுங்கதைகள் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான […]
Read more