நெஞ்சில் நிறைந்த ஏ.என்.

நெஞ்சில் நிறைந்த ஏ.என்., டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக். 272, விலை 160ரூ. சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் (ஏ.என்) அவர்களின் நட்பு வட்டம் எத்துணை பெரியது? எத்தகைய சான்றோர்களுடன் அவர் பழகி இருக்கிறார்? ஓர் உற்ற நண்பனாக, உடன் பிறவாச் சகோதரனாக, சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்குபவராக, திறமைசாலிகளை இனம் கண்டு ஊக்குவிக்கும் ஆசானாக, எளியோர்களை வளர்த்துவிட்ட வழிகாட்டியாக என பல்வேறு ரூபங்களில், எண்ணற்ற இதயங்களில் வியாபித்திருக்கும் அவரின் வாழ்க்கைப் பயணத்தின் வரலாற்றுப் பதிவாக மலர்ந்திருக்கிறது […]

Read more

முடிவுகள் முடிவானவை அல்ல

முடிவுகள் முடிவானவை அல்ல, டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அச்சகம், 29/ஏ-8 தெற்கு கால்வாய்க்கரைச் சாலை, சென்னை 28, பக். 116, விலை 50ரூ. அலைபாய்கின்ற மனம் முடிவு எடுக்க இடர்ப்படும். மனதைத் திடப்படுத்தி முடிவெடுத்தல் என்பது ஒரு கலை. இது காலம் காலமாக இந்திய தத்துவ அறிஞர்கள் பேசம் விஷயம். ஆனால் நடைமுறை யதார்த்தங்களுடன் ஆசிரியர் இதை விளக்கியிருப்பது சிறப்பானது. எல்லா முடிவுகளுக்கும் மாற்று முடிவுகள் இருக்கின்றன என்பதை நடைமுறை வாழ்வில் ஏற்படும் அனுபவங்களை வைத்து தனித்தனித் தலைப்புகளில் ஆசிரியர் இயல்பாக […]

Read more

பாரதி திருநாள்

பாரதி திருநாள், டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், சென்னை 35, விலை 100ரூ. மகாகவி பாரதிபாரதி பற்றிய அபூர்வ நூல். மகாகவி பாரதியார் மறைந்தபோது, 13/9/1921 தேதியிட்ட சுதேசமித்ரனில் வெளியான செய்தி,அப்போது தலைவர்கள் வெளியிட்ட அனுதாபச் செய்திகள், நடைபெற்ற அனுதாப கூட்ட விவரங்கள் முதலியவற்றை சிரமப்பட்டு சேகரித்து வழங்கியுள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்.   —-   சித்தர்களின் ஞான வழி, சி.எஸ்.தேவநாதன், குறிஞ்சி, 15/21. டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது […]

Read more