பாரதி திருநாள்
பாரதி திருநாள், டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், சென்னை 35, விலை 100ரூ.
மகாகவி பாரதிபாரதி பற்றிய அபூர்வ நூல். மகாகவி பாரதியார் மறைந்தபோது, 13/9/1921 தேதியிட்ட சுதேசமித்ரனில் வெளியான செய்தி,அப்போது தலைவர்கள் வெளியிட்ட அனுதாபச் செய்திகள், நடைபெற்ற அனுதாப கூட்ட விவரங்கள் முதலியவற்றை சிரமப்பட்டு சேகரித்து வழங்கியுள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்.
—-
சித்தர்களின் ஞான வழி, சி.எஸ்.தேவநாதன், குறிஞ்சி, 15/21. டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 49ரூ.
சித்தர்கள் பற்றியும், அவர்களின் உபதேசங்கள் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.
—-
கவிமுகிலார் ஆய்வில் திருக்குறள், கவிமுகில் இராம. முத்துக்குமரனார், ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கம், 47, குமரன்கோயில் வீதி. கடலூர் துரைமுகம் 607003, விலை 50ரூ.
திருக்குறள் ஓர் தேசிய நூல் ஆய்வு, முப்பாலில் மூன்றாம் பால் ஓர் ஆய்வு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஓர் முத்தமிழ் அறிஞர் வள்ளுவர் வரலாற்று ஆய்வு என்ற மூன்று தலைப்புகளில் திருக்குறளை ஆய்வு செய்துள்ளார் கவிமுகில் இராம. முத்துக்குமரனார். சிந்தனைக்கு உரிய கருத்துக்கள் நிறைந்துள்ளன.
—-
ஞான ஏணியில், பிரைன் பேங்க், நல்லி குப்புசாமி செட்டியார், 16/2, ஜெகதாம்பாள் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமியின் இளைய சகோதரர் சிவன் சுவாமியின் 500 மகா வாக்கியங்களை தொகுத்து அதற்கு எளிய நடையில் விளக்கம் தந்திருக்கிறார் ஆசிரியர் நல்லி குப்புசாமி செட்டியார். நன்றி: தினத்தந்தி 15/2/2012.