நெஞ்சில் நிறைந்த ஏ.என்.
நெஞ்சில் நிறைந்த ஏ.என்., நன்னூல் அகம், விலை 160ரூ.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றிய ஏ. நடராஜன், எல்லோராலும் அன்புடன் “ஏ.என்.” என்று அழைக்கப்பட்டவர். எழுத்தாளர், இசை ஆர்வம் மிக்கவர், சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டவர்.
அவரால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏராளம். நடராஜனின் சிறப்புகளை பல்வேறு கோணங்களில் பாராட்டியுள்ள பல வி.ஐ.பி.கள் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. ஏ. நடராஜனுடன் நெருங்கிப் பழகியவரான நல்லிகுப்புசாமி செட்டியார் இந்த நூலை மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 23/3/2017