மீன்கள் உறங்கும் குளம்

மீன்கள் உறங்கும் குளம், பிருந்தா சாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி ஹைக்கூவுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை, அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில் பிருந்தா சாரதி எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன. மணல் வீடு கட்டி விளையாடுகிறது அகதியின் குழந்தை. ‘இரு நாட்டுக் கொடிகளையும் ஒரே மாதிரி அசைக்கிறது எல்லையில் வீசும் […]

Read more

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும், பிருந்தா சாரதி, படி வெளியீடு, பக். 88, விலை 70ரூ. எண்களுக்குள் நுழைந்து வாழ்க்கையைத் தேடும் உத்தி. ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்தும் இன்னொன்றைச் சேர்த்தும் காணும் வாழ்வியல் தத்துவம் இக்கவிதைகளுக்குள் உட்புகுந்து பயணிக்கின்றன. ஒரே சிகரத்தில் இருந்து உருண்டு வந்து இரண்டான கூழாங்கற்களின் சந்திப்பும், எரிந்து கொண்டு இருக்கும் இரண்டு ஊதுவத்திகளின் புகை ஒன்றாய்க் கலப்பதும், வெற்றிடத்தில் ஒன்றைத் தேடுவதும் என வாழ்வின் பல கோணங்கள் ஆராயப்படம் களமாக இக்கவிதைகள் அலசப்படுகின்றன. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more