ராமாமிர்தம்

ராமாமிர்தம், லா.ச.ரா. நாவல்கள், காவ்யா, பக். 720, விலை 700ரூ. தமிழ் இலக்கிய முன்னோடிகளில் முக்கியமான ஒருவர் லா.ச.ராமாமிர்தம். நம்மை உணர்ச்சிமயமாக்கி, ஒரு மாய உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் அவர் எழுத்துக்களுக்கு உண்டு. அவருடைய படைப்புகளை தொகுத்து, “ராமாமிர்தம்” என்ற தலைப்பில் பெருநூல்களாக வெளியிடுகிறது, “ராமாமிர்தம் 1” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதில் “புத்ர”, “அபிதா”, கல்சிரிக்கிறது”, “கேரளத்தில் எங்கோ”, “கழுகு”, “பிராயச்சித்தம்” ஆகிய 6 நாவல்கள் அடங்கியுள்ளன. ராமாமிர்தத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அன்னைக்கு அணிவிக்கப்பட்ட […]

Read more

வரலாறு படைத்த பெண்கள்

.வரலாறு படைத்த பெண்கள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கியுள்ளது. அவர்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள் மற்றும் உயரிய தகுதி குறித்தும் இந்த நூலில் எழுத்தாளரும் மார்க்க அறிஞருமான மவுலவி நூஷ்மஷ்ழரி அழகிய முறையில் எழுதியுள்ளார். கொடுஞ்கோலன் பிர் அவ்னின் மனைவி மற்றும் இம்ரானின் மகள் மர்யம் ஆகியோரை திருக்குர்ஆன் முன்மாதிரி பெண்களாக கூறுகிறது. அவர்கள் குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்து போர்க்களத்திலும், அரசியல் களத்திலும் பல அரிய சாதனைகள் புரிந் […]

Read more

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம், ஷ்யாம் சேகர், தேவராஜ் பெரியதம்பி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ. 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை, கடந்த நவம்பர் 8-ந் தேதி அன்று தொலைக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பண மதிப்பு நீக்கத்துக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? இந்த அறிவிப்பால் இதுவரை சாதித்தது என்ன? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடை காண முயற்சிக்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் […]

Read more

மாடர்ன் தியேட்டர்ஸ்

மாடர்ன் தியேட்டர்ஸ், விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ- திரைப்படத் தயாரிப்பில் ஜெமினி, ஏவி.எம்., பட்சிராஜா, ஜுபிடர் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலக் கட்டத்தில், அவர்களுடன் முன்னணியில் இருந்த நிறுவனம் “மாடர்ன் தியேட்டர்ஸ்.” இதன் அதிபரான டி.ஆர். சுந்தரம், 97 படங்களைத் தயாரித்து வெளியிட்டார். அவர் மறைவுக்குப் பின் நிர்வாகத்தை ஏற்ற அவர் மகன் ராமசுந்தரம், படங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை 118 ஆக உயர்த்தினார். தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தைத் தயாரித்தவர் டி.ஆர். சுந்தரம்தான். மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் மு. […]

Read more

எளிமையின் ஏந்தல்

எளிமையின் ஏந்தல், தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 240ரூ. கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர். நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். மொத்தம் 48 கட்டுரைகள், எல்லாம், படிப்பவர்களை சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். “கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்” என்ற கட்டுரையில் நல்லகணணு கேட்கிறார்- “ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை இலங்கை அரசுமதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருதமுடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் […]

Read more

சிகரத்தை நோக்கி

சிகரத்தை நோக்கி, குவைத் கா. சேது, மணிமேகலைப்பிரசுரம், விலை 240ரூ. தமிழகத்தில், செம்பொன்மாரி என்ற சிறுகிராமத்தில் பிறந்து, மும்பையில் வேலை பார்த்து, பின்னர் குவைத் நாட்டுக்குச் சென்ற கா.சேது, அங்கு விமானப் பணியாளராக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றினார். குவைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம், மூத்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். சிறந்த எழுத்தாளரான இவர், தன் வாழ்க்கை வரலாற்றை “சிகரத்தை நோக்கி” என்ற தலைப்பில் எழுதினார். அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. தன் வாழக்கை அனுபவங்களை கதைபோல சுவைபட […]

Read more

வளரும் பேச்சாளருக்கு

வளரும் பேச்சாளருக்கு, முனைவர் மு. கலைவேந்தன், பதிப்பாசிரியர் கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 200ரூ. மேடைப்பேச்சு ஒரு கலை. சிலருக்கு மேடை ஏறினாலே உதறல் எடுக்கும். அச்சத்தைப் போக்கி, மேடைப்பேச்சில் வல்லவர் ஆவதற்கான வழிமுறைகளை இந்நூலில் விளக்குகிறார், முனைவர் மு. கலைவேந்தன். தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர், சிறந்த மேடைப்பேச்சுக்கு முன்னோடிகள். அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பந்த் ஆகியோர் மேடைத் தமிழை […]

Read more

விடியலை நோக்கி ஒரு மாற்றம்

விடியலை நோக்கி ஒரு மாற்றம், கி. கார்த்திகேயன், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ. “ஊழல்களின் தாக்கம்”, “விவசாயமே நம் சுவாசம்”, “உணவே உயிர்”, “குப்பைக் கூடையாகும் இந்தியா” முதலான தலைப்புகளில் 44 கட்டுரைகள் கொண்ட புத்தகம். சிந்தனைக்கு விருந்து தரும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.   —- விளம்பரவியல், சிவகுரு பதிப்பகம், விலை 190ரூ. வியாபாரத்துக்கு விளம்பரம் அவசியம். நாளிதழ்களில் விளம்பரம் செய்வதால் நிறைய பலன் உண்டு. விளம்பரவியல் பற்றி, தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா […]

Read more

திருமூலரும் பாரதிதாசனும்

திருமூலரும் பாரதிதாசனும், முனைவர் மா. அண்ணாதுரை, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. திருமூலரும், பாரதிதாசனும் ஆகிய இரு மாறுபட்ட படைப்பாளிகள் பற்றிய ஆய்வு நூல். இவர்களின் கருத்துக்களை ஒரு சேரக் காண்பது கடினம். திருமூலர் காலத்தால் முற்பட்டவர். பாரதிதாசன் 19-ம் நூற்றாண்டில் தோன்றிய மிகபெருமை வாய்ந்த கவிஞர். முன்னவர் ஆத்திகத்தில் தோய்ந்த சித்தர். பின்னவர் ஆத்திகக் கவிஞராக தோன்றி, பின்னாளில் நாத்திகக் கவிஞராக மலர்ந்தார். இருவரும் இறைக்கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், சமுதாய சிந்தனைகளில் ஏறக்குறைய ஒன்றாக விளங்கியவர்கள். இவர்களைப் பற்றி திறனாய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர் […]

Read more
1 6 7 8