எளிமையின் ஏந்தல்
எளிமையின் ஏந்தல், தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 240ரூ.
கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர். நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். மொத்தம் 48 கட்டுரைகள், எல்லாம், படிப்பவர்களை சிந்திக்க வைக்கும் கட்டுரைகள்.
“கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்” என்ற கட்டுரையில் நல்லகணணு கேட்கிறார்- “ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை இலங்கை அரசுமதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருதமுடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் பலியிடப்படலாமா? – இப்படி ஆணித்தரமான வாதங்களை பல கட்டுரைகளில் காண முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 15/2/2017.