திருமூலரும் பாரதிதாசனும்
திருமூலரும் பாரதிதாசனும், முனைவர் மா. அண்ணாதுரை, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ.
திருமூலரும், பாரதிதாசனும் ஆகிய இரு மாறுபட்ட படைப்பாளிகள் பற்றிய ஆய்வு நூல். இவர்களின் கருத்துக்களை ஒரு சேரக் காண்பது கடினம். திருமூலர் காலத்தால் முற்பட்டவர். பாரதிதாசன் 19-ம் நூற்றாண்டில் தோன்றிய மிகபெருமை வாய்ந்த கவிஞர். முன்னவர் ஆத்திகத்தில் தோய்ந்த சித்தர். பின்னவர் ஆத்திகக் கவிஞராக தோன்றி, பின்னாளில் நாத்திகக் கவிஞராக மலர்ந்தார்.
இருவரும் இறைக்கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், சமுதாய சிந்தனைகளில் ஏறக்குறைய ஒன்றாக விளங்கியவர்கள். இவர்களைப் பற்றி திறனாய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர் முனைவர் மா. அண்ணாதுரை.
நன்றி: தினத்தந்தி, 15/2/2017.