பண மதிப்பு நீக்கம்
பண மதிப்பு நீக்கம், ஷ்யாம் சேகர், தேவராஜ் பெரியதம்பி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ.
500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை, கடந்த நவம்பர் 8-ந் தேதி அன்று தொலைக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பண மதிப்பு நீக்கத்துக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? இந்த அறிவிப்பால் இதுவரை சாதித்தது என்ன? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடை காண முயற்சிக்கிறது இந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 15/2/2017.
—-
சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ.
குழம்பு வகைகள், கூட்டு, பொரியல் என பல வகையான சைவ சமையல் செய்முறைகளை ராணி எஸ். மதுரவல்லி இந்த நூலில் விளக்கியுள்ளார். இது தவிர அசைவ உணவு வகைகள் குறித்து எஸ். விஜிலா சுவைபட எழுதியுள்ளார். இரண்டும் தனித்தனியே விலை 50ரூ.
நன்றி: தினத்தந்தி, 15/2/2017.