ஒரு கதைசொல்லியின் கதை

ஒரு கதைசொல்லியின் கதை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா… ஏன் சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி தானே சோறு ஊட்டுனாங்க. அப்போ நம்பினோம். மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது, யாராவது பேசுவாங்களானு ஏங்குற மனசுக்கு கதை சொன்னா பிடிக்கும். அதை சிவா செய்து கொண்டிருக்கிறான். வேண்டாமென்று உதறித் தள்ளிய காதலி, குண்டடிபட்டு கிடக்கும் போதும் அன்பு மாறாமல் சிவாவால் பாதுகாக்க முடிகிறதென்றால், அந்த காதல் […]

Read more

தெற்கிலிருந்து ஒரு சூரியன் திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்

தெற்கிலிருந்து ஒரு சூரியன் திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம், கே.அசோகன், கே.எஸ்.மீடியா லிமிடெட், விலை 200ரூ. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக்கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தலைவர் கருணாநிதியின், 60 சட்ட சபை பணி என்ற மூன்று முக்கிய அம்சங்களை சுருக்கமாக அலசும் புத்தகம். தமிழ் நாளிதழ், ‘தி இந்து’வின் அங்கமாக வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ணகாந்தி, சோஷலிச தத்துவவாதி யோகேந்திர யாதவ் உட்பட பலர் எழுதிய கருத்துக்களை இந்த நூல் சித்தரிக்கிறது. பிரதமராக பதவியேற்க, வலியுறுத்தியவர்களிடம் கருணாநிதி தெரிவித்த கருத்தை முன்னாள் […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, ஆங்கிலத்தில் மலாலா யூசுப்ஸை, கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குரல் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து, 100 மைல்கள் தூரத்தில் உள்ள, பாகிஸ்தானைச் சேர்ந்த, மலைகள் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிறுமி மலாலா. அவர் கனவெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு சென்று படிப்பது மட்டும் தான். இயல்பிலேயே பேச்சாற்றல் மிகுந்த மலாலாவிற்கு, அவரது 11 வயதில் வாசித்த ஸ்டீபன் ஹாக்கிங்கின், ‘காலம்: ஒரு […]

Read more

பாரதத்தின் பண்பாடு

பாரதத்தின் பண்பாடு, சுவாமி முருகானந்தா, காந்தலட்சுமி சந்திரமவுலி, வானதி பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், (1999 டிச. 5ம் தேதி) தென்னாப்ரிக்க நகரான கேப்டவுனில் நிகழ்ந்த, மூன்றாவது சர்வமத மாநாட்டில், நெல்சன் மண்டேலோவுடன் கலந்து கொண்டு, சுவாமிஜி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. பாரதம், ஆன்மிகம், பகவத்கீதை பற்றிய மேன்மையான செய்திகள் பல, இதன் கண் ஒளி வீசுகின்றன. போரை உருவாக்குவதற்காக போதிக்கப்பட்டதல்ல பகவத்கீதை. நீங்கள் உங்கள் கடமைகளை எங்கு, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என, […]

Read more