வரலாற்றில் புலிப்புரக்கோவில்
வரலாற்றில் புலிப்புரக்கோவில், மா.சந்திரமூர்த்தி, கலைத்தாய் பதிப்பகம், விலைரூ.200. கோவில்களால் பெருமை பெற்றது தமிழகம். சங்க காலத்தில் மரம், செங்கல்லாலும், பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து கற்றளிகளாகவும் அமைத்தனர். சோழர், பாண்டியர், விஜய நகர ஆட்சிகளில் கலை நுட்பமிக்க கோவில்களைக் கட்டினர் என்ற முகவுரையுடன் துவங்குகிறது நுால். மதுராந்தகம் அருகே படாளம் கிராமத்தில் பழமை மிக்க புலிப்புரக்கோவில் பற்றி விளக்குகிறது. வரலாறு, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி வியக்க வைக்கிறது. கொடியாத்தம்மன் கோவில், முக்தீசுவரர், அழகு திருவாத்தம்மன் கோவில் சிறப்புகள் விரிவாக தரப்பட்டுள்ளன. ஆலக்கோவில் என்பது ஆல […]
Read more