ஆயக் கலைகள் அறுபத்து நான்கு

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு,  செந்துறை முத்து,  முல்லை பதிப்பகம், பக்.576, விலை  ரூ.500.

கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, நடனக் கலை, நாடகக் கலை, இசைக் கலை, சோதிடக் கலை என நமக்குத் தெரிந்த கலைகள் சில இருந்தாலும் தெரியாத கலைகள் நிறைய உள்ளன. எமகண்டக்கவிதைக் கலை, கனா நூற்கலை, தம்பலக் கலை, தொகுப்புக் கலை, திருவிழாக் கலை ஆகியவற்றைப் பற்றி கேள்விப்படாதவர்களே இருப்பார்கள். இந்நூல் அறுபத்து நான்கு கலைகள் எவை எவை என்று சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒவ்வொரு கலையின் தோற்றம், அதில் ஏற்பட்ட வளர்ச்சி, ஒரே கலையில் பல்வேறு பிரிவுகள் இருப்பது, காலத்துக்குக்கேற்ப குறிப்பிட்ட கலையில் நிகழும் மாறுதல்கள் என எல்லாவற்றையும் விரிவாக விளக்கிச் சொல்கிறது.

உதாரணமாக, கட்டடக் கலையை எடுத்துக் கொண்டால், சங்ககாலத்தில் கட்டடங்கள் மண், செங்கல், மரம், சுண்ணாம்பு, உலோகம் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. கற்கட்டடங்கள், கற்களால் கட்டப்பட்ட கோயில்கள் சங்க காலத்தில் இல்லை. அணைக்கட்டுகளைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது. சங்ககால கட்டடக் கலை பற்றி மட்டும் அல்லாமல் பிற்கால சோழர் கால கட்டடக்கலை, அவர்கள் கட்டிய கோயில்கள், அரண்மனைகள் பற்றிய வரலாறு, பல்லவர் காலத்திய கற்கோயில்கள் பற்றிய விவரங்கள் என கட்டடக்கலை பற்றிய அனைத்து விஷயங்களையும் எளிமையான முறையில் இந்நூல் விளக்கிச் செல்கிறது.

இதுபோன்று பிற கலைகள் தொடர்பான பல விவரங்களை மிக எளியமுறையில் விளக்கும் விரிவான தகவல் களஞ்சியமாகவும், அறுபத்து நான்கு கலைகளின் வரலாறாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

நன்றி: தினமணி, 3/1/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%86%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.