பிஃபோர் பிகமிங் பிளைண்டு

பிஃபோர் பிகமிங் பிளைண்டு, டிராயிங்ஸ் பை நடேஷ், மு.நடேஷ், கடவு வெளியீடு, கூத்துப்பட்டறை, விலை: ரூ. 750 பெண்மையும் இயற்கையும் இணையும் கோடுகள் கறுப்பு மைக் கோட்டுச் சித்திரங்களின் வழியாக இசைமையையும் புலன் ஈர்ப்பையும் ஏற்படுத்த வல்ல தமிழ் நவீன ஓவியர்கள் சிலர்தான். ஆதிமூலம், சந்ரு, மருது, மனோகரின் பட்டியலில் ஓவியரும் நிர்மாணக் கலை முன்னோடியுமான மு.நடேஷுக்கும் பிரதான இடம் உண்டு. அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அம்மா, வீட்டுக்குக் கொண்டுவரும் துண்டுக் காகிதங்களில் சிறுவயதிலேயே கிறுக்கி வரையத் தொடங்கிய நடேஷுக்குக் கோட்டோவியம் என்பது […]

Read more

கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?

கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?, குழந்தைகள் திரைப்படங்கள், ஸ்ரீரசா, கடவு வெளியீடு, விலை 100ரூ. நுண்ணிய உலகம் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் உண்மையில் குழந்தைகளுக்கு மட்டுமானவை அல்ல. பெரியவர்களுக்கும்தான். அதுபோன்ற 19 திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல். மதுரையில் தமிழ்நாடு குழந்தைகள் திரைப்பட இயக்கத்தின் சார்பாக 2014ஆம் ஆண்டு திரையிடப்பட்ட படங்களைப் பற்றி நூலாசிரியர் தீக்கதிர் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வாட்ஜ்தா என்ற சௌதி அரேபியாவில் உள்ள 11 வயது சிறுமியின் கனவுகளைச் சொல்லும் படமே பெண்ணியப்பார்வையிலும் பலவிஷயங்களைச் சொல்வதாக இருக்கிறது. சைக்கிள் ஓட்ட […]

Read more