பாறுக் கழுகுகளைத் தேடி

பாறுக் கழுகுகளைத் தேடி, சு.பாரதிதாசன், கலம்க்ரியா, விலை குறிப்பிடப்படவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்குள் உலகில் கிட்டத்தட்ட மறைந்துவிட்ட கழுகு இனம் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். அழிவின் விளிம்பில் இருக்கும் ஓர் உயிரினத்தை மீட்டு காக்க முடியும் என்பதை நிரூபிக்கும் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்தியா முழுதும் பரவலாக காணப்பட்ட பாறு என்ற கழுகு இனம் தற்போது அருகிவிட்டது. அதை காக்கும் பணியில் கண்ட அனுபவத்துடன் கழுகு இனம் பற்றிய அரிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நுால் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியில் உள்ளது. மொத்தம் […]

Read more

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்., முனைவர் ராஜேந்திரன், மெரினா புக்ஸ், விலைரூ.1800 தமிழ்த்திரை உலகில் புரட்சி நடிகராக, தமிழக ஆட்சி கட்டிலில் முதல்வராக, பொன்மனச் செம்மலாக, ஏழைப் பங்காளனாக விளங்கிய மருதுார் கோபால ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆரின் வாழ்க்கை நிகழ்வுகளை முழுமையாக தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். குடும்ப உறுப்பினராக நேரில் சந்தித்த அனுபவம், எம்.ஜி.ஆர்., அளித்த பேட்டிகள், அவருடன் பழகியவர்கள் தந்த அனுபவக் கட்டுரைகள், அரசு மற்றும் சினிமா துறை சார்ந்த ஆவண ஆதாரங்களின் துணை கொண்டு தொகுத்து எழுதப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., வாழ்வில் திருப்பு முனைகளைக் காட்டும் போட்டோக்களும், […]

Read more

சங்ககாலச் செங்கண்மா மூதூர்

சங்ககாலச் செங்கண்மா மூதூர், க.மோகன்காந்தி, பாரதி புக் ஹவுஸ், விலைரூ.170. தமிழர் பண்பாட்டு சிறப்பை கூறும் 16 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். செங்கம் பகுதியை 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நன்னன் சேய் நன்னனின் சிறப்பு, நாட்டு வளம், செய்யாறு ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளது. செங்கம் என்ற பகுதி அப்போது, ‘செங்கண்மா’ என வழங்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு நுாலான மலைபடுகடாம், நன்னனின் சிறப்புகளை கூறுவதையும் தெளிவுபடுத்தி உள்ளது. சங்க காலத்தின் சமூக நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது. மேலும், சங்க கால பொருளாதார நிலையைக் […]

Read more

அடுக்கம்

அடுக்கம், டி. செல்வராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.280 ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் அரசு பணியாளர் எதிர்கொள்ளும் இன்னல், சமூகத்தில் தகவமைத்துக் கொள்வதற்கான போராட்டம், அரசு இயந்திரத்தில் ஊடுருவியுள்ள ஜாதிப் பாகுபாடு, சுரண்டல் போன்றவற்றை சித்தரித்து, ஏற்றத்தாழ்வு அடுக்குகளால் விளையும் வேற்றுமைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள புதினம். நெல்லை வட்டாரப் பின்னணியில் நிகழ்ந்த போராட்டங்களுடன் விளிம்பு நிலை மக்களின் இன்னல்கள், இயற்கைச் சீரழிப்பு, பழங்குடிச் சமூகம் மீதான அடக்குமுறையை களமாக கொண்டு நகர்த்தப்படுகிறது. ஒரு சிமென்ட் தொழிற்சாலை, விவசாயத்தைச் சிதைத்ததும், தொழிலாளிகளைச் சீரழித்ததுமாக கதை […]

Read more

திருக்கயிலையில் நாதோபாஸனை

திருக்கயிலையில் நாதோபாஸனை, ஜெமினி ராமமூர்த்தி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் இந்திய யாத்ரீகர்களுக்கு, நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும் மானஸரோவரும் இந்தியாவில் இல்லை; இரண்டுமே மேற்கு பகுதியில் உள்ள இமயத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட புனித தலங்களை பல சிரமங்களுக்கு இடையே நேரில் சென்று தரிசித்து, அந்த அனுபவங்களை எளிய நடையில் அனைவரும் புரிந்து அனுபவிக்கும் வகையில் ஜெமினி ராமமூர்த்தி எழுதியுள்ளார். நாமே நேரில் சென்று அந்த தலங்களை தரிசித்த அனுபவத்தை, இந்த நுாலைப் படிப்பதன் […]

Read more

மந்திர பூமி

மந்திர பூமி, ஞாநி, குகன் பதிப்பகம், விலைரூ.300. மாயாஜாலக் கதை நுால். கதிர் மாறனை கதைத் தலைவனாகக் கொண்டு வாழ்வில் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களையும், சாகச சம்பவங்களையும் விளக்கும் நுால். இதில் சொல்லப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், இடம், காலம் அனைத்தும் கற்பனையே என்றாலும், அவை படிப்போரை வேறு ஓர் உலகத்திற்கு அழைத்து சென்று மகிழ்வூட்டி தன்னம்பிக்கையை கொடுக்கிறது. இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் மகிழ்வை தரும் நுால். – ராமலிங்கம் நன்றி: தினமலர், 6/3/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

தத்துவத்தின் கனிதல், சின்னச் சின்ன ஞானங்கள்

தத்துவத்தின் கனிதல், சின்னச் சின்ன ஞானங்கள், யதி, தமிழில்: யூமா வாசுகி, தன்னறம் வெளியீடு, மொத்த விலை: ரூ.620. 1998-ல் ‘காலச்சுவடு’ இதழில் ‘மந்திரம், இசை, மௌனம்’ என்ற தலைப்புடன் ஜெயமோகன் எடுத்திருந்த நேர்காணல், நித்ய சைதன்ய யதி (1924 – 1999) என்ற பெயரைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே அறிமுகப்படுத்தியது. தத்துவம், கலை, இலக்கியம், ஆன்மிகம் எனப் பல தளங்களில் அமைந்த செறிவான அந்த உரையாடல், நித்ய சைதன்ய யதியின் ஆளுமையை உணரச்செய்தது. அதன் பிறகு, செப்டம்பர் 1999-ல் வெளியான ‘சொல் புதிது’ […]

Read more
1 6 7 8