அடுக்கம்
அடுக்கம், டி. செல்வராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.280
ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் அரசு பணியாளர் எதிர்கொள்ளும் இன்னல், சமூகத்தில் தகவமைத்துக் கொள்வதற்கான போராட்டம், அரசு இயந்திரத்தில் ஊடுருவியுள்ள ஜாதிப் பாகுபாடு, சுரண்டல் போன்றவற்றை சித்தரித்து, ஏற்றத்தாழ்வு அடுக்குகளால் விளையும் வேற்றுமைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள புதினம்.
நெல்லை வட்டாரப் பின்னணியில் நிகழ்ந்த போராட்டங்களுடன் விளிம்பு நிலை மக்களின் இன்னல்கள், இயற்கைச் சீரழிப்பு, பழங்குடிச் சமூகம் மீதான அடக்குமுறையை களமாக கொண்டு நகர்த்தப்படுகிறது. ஒரு சிமென்ட் தொழிற்சாலை, விவசாயத்தைச் சிதைத்ததும், தொழிலாளிகளைச் சீரழித்ததுமாக கதை தொடர்கிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அதிகாரி எதிர்கொண்ட அவமானங்களையும் பயிற்சிப் பணியின் போதும் ஏற்பட்ட ஜாதிய பாகுபாட்டு வடுக்கள், மருத்துவ சிகிச்சையில் பாகுபாடு போன்றவற்றையும் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. சோசலிச யதார்த்தவாதக் கோட்பாட்டை வைத்து, எளிய நடையில் விறுவிறுப்பான நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு
நன்றி: தினமலர், 6/3/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818