தேன்கூடு

தேன்கூடு, தொகுப்பு ஆசிரியர்: உமையவன், நிவேதிதா பதிப்பகம், விலை:ரூ.110. சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும் வகை மிகச் சிறப்பான 100 பாடல்கள் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. குழந்தைகள் தொடர்பான பல நூல்களை எழுதியவரான இந்த நூலின் தொகுப்பாசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மலரும் உள்ளம், சிரிக்கும் பூக்கள், பழைய கதை புதிய பாடல் உள்ளிட்ட நூல்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட 100 பாடல்களும் அறிவுக்கு விருந்தாவதோடு, சிறுவர்-சிறுமிகளை வெகுவாகக் கவரும் வண்ணம் உள்ளன. நன்றி: […]

Read more

விகடன் இயர்புக் 2022

விகடன் இயர்புக் 2022, பதிப்பாளர் பா.சீனிவாசன், விகடன் பிரசுரம், விலை:ரூ.275. 10 -ம் ஆண்டாக வெளியாகி இருக்கும் இயர்புக் 2012 நூலில், பல்வேறு நாடுகளின் மக்கள் சந்தித்த முக்கிய பிரச்சினைகள், உலகம், இந்தியா, தமிழகம் ஆகியவற்றின் நடப்பு நிகழ்வுகள், மத்திய அரசின் 2021-ம் ஆண்டின் பட்ஜெட் முக்கிய அம்சங்கள், பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்கள் விவரம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வுகளில் பங் கேற்பவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் யு.பி. எஸ்.சி. தேர்வு வினா-விடை, தேர்வு அட்டவணை, குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் அனுபவக் […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா; விலை:ரூ.1000. தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டுக்குள் ஓடி, கடலில் கலக்கும் புண்ணிய நதியான தாமிரபரணி தொடர்பான தகவல்கள் இந்த ‘நூலில் பொதிந்து கிடக்கின்றன. தாமிரபரணி தோன்றிய வரலாறு, அதன் குறுக்கே உள்ள கள், நீர்த்தேக்கங்கள், அருவிகள், இந்தப் பகுதியில் வாழ்ந்த அகத்தியர் பற்றிய செய்திகள், நதி தொடர்பான பழங்கதைகள், நதி செல்லும் வழியில் உள்ள ஆலயங்கள், முக்கிய ஸ்தலங்கள் போன்றவையும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அது தொடர்பான புராணம் மற்றும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் கதை […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, தமிழில்: டாக்டர் இரா.பாஸ்கரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை:500. பல லட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்ட இரண்டாவது உலக யுத்தம்(1939-1945) தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் இதில் தரப்பட்டு இருக்கின்றன. இந்த யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதில் ஒவ்வொரு நாடுகளின் செயல்பாடுகள், இந்த யுத்தத்தால் விளைந்த முடிவுகள் ஆகியவை, இதுவரை வெளிவராத ஆவணங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றுடன் ரஷியா மற்றும் பல நாடுகளின் அரசியல் பிரமுகர்கள் போர் குறித்து வெளியிட்ட தகவல்கள், ராணுவ நிபுணர்கள் நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை யும் பயன்படுத்தி […]

Read more

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள், பூம்புகார் பதிப்பகம், விலை: முதல் பாகம் ரூ.360; 2-ம் பாகம் ரூ.290; 3-ம் பாகம் ரூ.340;     முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 1989-ம் ஆண்டு முதல் சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரங்களில், சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் 3 பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. 1989 ஏப்ரல் 1-ந் தேதி நிதிநிலை அறிக்கை மீதான அவரது உரையுடன் இது தொடங்குகிறது. ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கைகள் மீதான உரைகள், ஆளுநர் உரை மீதான பதில் உரைகள் ஆகியவை 1-ம் பாகத்திலும், […]

Read more

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம்

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.560. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செஞ்சேனை எதிர்கொண்ட வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. போலந்தில் பிறந்து, ஜெர்மனியின் தாக்குதல் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த இன்றைய உக்ரைனின் லிவிவ் நகரில் அடைக்கலமாகி கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த வாண்டா வாஸிலெவ்ஸ்கா எழுதிய நாவலின் தமிழ் வடிவம் இது. நன்றி: இந்து தமிழ், 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

உவர் மணல் சிறுநெருஞ்சி

உவர் மணல் சிறுநெருஞ்சி, தாமரைபாரதி, வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.130. சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் தாமரைபாரதி, 1990-களிலிருந்து கவிதைகளை எழுதிவருகிறார். அவருடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு இது. முதல் கவிதைத் தொகுப்பான ‘தபுதாராவின் புன்னகை’, பிரமிள் 2021-சிறப்புச் சான்றிதழ் விருதுபெற்றது. நன்றி: இந்து தமிழ், 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ரொமிலா தாப்பர்

ரொமிலா தாப்பர் – ஓர் எளிய அறிமுகம், மருதன், கிழக்கு பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200. நம் காலத்தின் மாபெரும் வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரின் எழுத்துகளை அறிந்தவர்களுக்குக்கூட அவரைப் பற்றிய விவரங்களும் பின்புலமும் அவ்வளவாகத் தெரிந்திருப்பதில்லை என்ற குறையைத் தீர்க்கத் தமிழில் வந்திருக்கிறது இந்த நூல். வாழ்க்கை, வரலாறு, உரையாடல் என்ற மூன்று பெரும் தலைப்புகளில் எளிய, ஆனால் ஓரளவில் விரிவாகவே ரொமிலா தாப்பர் பற்றி விவரிக்கிறார் ஆசிரியர் மருதன். தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் ரொமிலாவின் பங்களிப்பை […]

Read more

திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு

திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு, பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100 திருவள்ளுவரையும் திருமூலரையும் ஒப்பிட்டு கருத்துக்களை பதிவு செய்துள்ள நுால். திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் இறைவன் சிவபெருமானின் பெருமைகள் சுட்டப்படுகின்றன. ஆனால், உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறள், இந்த வரையறைக்குள் அடங்காமல், ஒழுக்க நெறியைக் காட்டுகிறது. கருப்பொருள்கள் பொதுவாக இருப்பினும் கருத்துக்கள் சற்று மாறுபட்டுள்ளன. ஒரு ஆய்வு நோக்கில் திருக்குறள் மற்றும் திருமந்திரத்தில் உள்ள பொதுவான 20 தலைப்புகளில் ஆராய்ந்து, ஒத்த கருத்துக்களையும், மாறுபட்ட கருத்துக்களையும் தொகுத்து அளித்துள்ளார். திருக்குறள், […]

Read more

தங்கம் விலை தக்காளி விலை

தங்கம் விலை தக்காளி விலை, இராமன் முள்ளிப்பள்ளம், சஞ்சீவியார் பதிப்பகம், விலைரூ.70. வித்தியாசமான கருக்களை மையமாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 11 கதைகள் உள்ளன. விருப்பத்தை அமல்படுத்தும் வகையில், கற்பனையில் நிவர்த்திக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. அவை, சமூகத்தின் இன்றைய தேவையை வலியுறுத்தும் வகையில் உள்ளன. தொகுப்பில் உள்ள முதல் கதை, அர்ச்சகர் பணி என்ற தலைப்பில் அமைந்தது. மிகவும் வித்தியாசமான கருவை அமைத்து எழுதியுள்ளார். வார்த்தைகளில் கடும் கோபம் தெறிக்கிறது. தொடர்ந்து புதிய யேசு, வெள்ளை நிறத்தொரு பூனை, சிதறு தேங்காய் […]

Read more
1 2 3 4 5 8