வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா

வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா, ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.140. இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வ.உ.சி.யின் சிறை வாழ்க்கையினும் வலி நிறைந்தது, வழக்கறிஞர் சன்னது பறிபோய் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட அவரது விடுதலைபெற்ற வாழ்க்கை. துயர் நிறைந்திருந்த இக்காலக்கட்டத்தில் அவருக்குப் பெருந்துணையாய் நின்றவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களே. தென்னாப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்திருந்ததால் அவர் வழியாகவும் பண உதவி செய்திருந்தனர். ஆனால், காந்தி அந்தப் பணத்தை வ.உ.சி.க்குத் தராமல் ஏமாற்றிவிட்டார் என்கிற தவறான தகவலின் அடிப்படையில், […]

Read more

நபிகளாரின் பொன்மொழிகள்

நபிகளாரின் பொன்மொழிகள், ஆலிம் பப்ளிகேஷன் பவுண்டேசன்; விலை:ரூ.650; இறைவனின் அருள் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் பெரிதும் போற்றப்படுகின்றன. பெரும்பாலான நபி மொழித் தொகுப்புகள் இறைநம்பிக்கை, தூய்மை, தொழுகை எனப் பாடத்தலைப்புகளைக் கொண்டு அமைந்து இருக்கும். ஆனால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் தொகுத்த முஸ்னது அஹ்மத், இதில் இருந்து வேறுபட்டது. இது நபித் தோழர்கள் பெயர்களால் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு நபித் தோழர் அறிவித்திருக்கும் நபிமொழிகளை ஒரே இடத்தில் காணலாம். மூன்றாம் பாகமாக வெளியாகி […]

Read more

தேசம் நேசித்த தலைவன்

தேசம் நேசித்த தலைவன், ஆதலையூர் சூரியகுமார், தாமரை பிரதர்ஸ் பீடியா,  விலை:ரூ.240. ஆயுதத்தின் துணையோடு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துக் களமாடிய வீரர் தேசம் நேசித்த தலைவன் சந்திரபோராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கைக் குறிப்பு என்ற அளவில் அமைக்காமல், முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தையும் தனித் தனித் தலைப்புகளில் கொடுத்து இருப்பதால் இந்த நூலை ஆர்வத்துடன் படிக்க முடிகிறது. நேதா ஜியின் இளமைக்கால வாழ்க்கை, வெளிநாடு சென்று கல்வி கற்றது. இந்தியாவுக்கு வந்து […]

Read more

எனது வாய்மொழி பதிவுகள்

எனது வாய்மொழி பதிவுகள்,  கி.ராஜநாராயணன், அன்னம்,  விலை:ரூ.300. கரிசல்காட்டு இலக்கியவாதியான கி.ராஜநாராயணன், வார, மாத நாளிதழ்களுக்கும், செய்தியாளர்களுக்கும் அளித்த நேர்காணல்கள் அனைத்தும் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அவர் மனதில் புதைந்துள்ள ஆசாபாசங்கள், பலதரப்பட்ட மக்கள் பற்றிய அவரது புரிதல்கள், மற்ற எழுத்தாளர்கள் குறித்த அவரது கண்ணோட் டம் ஆகியவை இந்த நேர்காணல்களில் வெளிப் பட்டு இருக்கின்றன. பள்ளிக்கூடமே செல்லாத அவர் கல்லூரி பேராசிரியரானது, எழுத்துலகில் அறிமுகம் ஆனது, கரிசல் பூமி மீது அவருக்கு உள்ள கரிசனம் ஆகிய அனைத்தையும் இந்த நூலில் காணமுடிகிறது. கி.ராஜநாராயணனை […]

Read more

எனது இமாலயப் பயணம்

எனது இமாலயப் பயணம், தாமரை செந்தூர்பாண்டி, சிவகாமி புத்தகாலயம், விலை:ரூ.120. தாமரை செந்தூர்பாண்டி, பானியட், குருஷேத்திரம், எழுத்தாளர் சண் சிம்லா, டேராடூன், ஹரித்துவார் என்ற பல இடங்களுக்கு பயணித்ததை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார். நடுத்தரவர்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையிலும், நம்மையும் அவருடன் அழைத்துச் சென்று விளக்கும் உணர்வைத் தரும் வகையிலும் இவற்றைத் தந்து இருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்கள், இந்தப் பயண அனுபவத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 20/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

1877 தாது வருடப் பஞ்சம்

1877 தாது வருடப் பஞ்சம், ஆசிரியர்: வில்லியம் டிக்பி; தமிழில்: வானதி; வெளியீடு: கிழக்கு பதிப்பகம்; விலை:ரூ.250. தமிழக வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய 1877-ம் ஆண்டு பஞ்சத்தின்போது மக்கள் எவ்வாறு துன்பப்பட்டார்கள் – அப்போது ஆட்சியில் இருந்த ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பவை இந்த நூலில் பதிவு செய்யப் பட்டு இருக்கின்றன. அப்போது சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர், அனைத்துத் தகவல்களையும் ஆதாரத்துடன் தந்து இருப்பதன் மூலம், பஞ்சத்தின் அவல நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். சில […]

Read more

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன்; வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்; விலை:ரூ.200; மாமல்லபுரம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்திருந்தாலும், சுவாரசியமான ஆய்வுத் தகவல்களோடு, தொடர்கதைக்கே உரித்தான விறுவிறுப்போடு, ஆங்காங்கே பொருத்தமான படங்களைச் சேர்த்து, வாசகர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று காட்டும் சுகானுபவங்களோடு வந்திருக்கும் இந்தப் புத்தகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. ஆசிரியர், மாமல்லபுரம் கடற்கரை பற்றிய வர்ணனைகளோடு புத்தகத்தைத் தொடங்கி இருப்பதே தனி அழகு. மாமல்லபுரம் சிற்பங்களில் புதைந்துள்ள புதிர்களை வரலாற்றுப் பின்னணியோடும், பக்தி இலக்கியங்களோடும் அலசி ஆராய்ந்து சொன்ன விதம், மாமல்லபுரம் கடலில் மூழ்கிய […]

Read more

எதிர் அரசியல் சினிமா

எதிர் அரசியல் சினிமா, ரதன், நிழல் பதிப்பகம், விலை: ரூ.150 உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்பைக் லீயின் ‘மால்கம் X’ திரைப்படத்தைப் பார்த்தவர்கள், கறுப்பினத் திரைப்படம் எப்படி ஒரு அரசியல் ஆயுதமாகப் புதிய இயக்குநர்களிடம் கைவரப்பெற்றுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இன்று உலக அளவில் மாற்றுத் திரைப்படம், இணை திரைப்படம், கலை திரைப்படம் ஆகியவை அரசியல் திரைப்படம் என்கிற ஒடுக்கப்பட்டவர்களின் குரலை முன்வைப்பதாக மாறியுள்ளன. இந்திய,தமிழ் சினிமாவில் தலித் சினிமா என்ற வகை உருவாகியிருப்பதைப் போல, உலக அளவில் கறுப்பின அரசியலை முன்வைக்கும் […]

Read more

இனி எல்லாம் நலமே

இனி எல்லாம் நலமே, டாக்டர் அமுதா ஹரி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200. பதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனை வருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. இந்நூல் பெண்களுக்கானது ஆண்களும் அவசியம் படித்துத் தெரிந்துகொள்வதற்கானது. பதின்பருவ மகள் ஏன் அடிக்கடி தனிமையை நாடுகிறாள், […]

Read more

எகிப்திய தொன்மைக் கதைகள்

எகிப்திய தொன்மைக் கதைகள்,  ஏவி.எம்.நஸீமுத்தீன், நேஷனல் பப்ளிஷர், விலை:ரூ.120. எகிப்து வரலாற்றில் பின்னிப் பிணைந்த அமானுஷ்ய சம்பவங்கள், மன்னர்கள் குடும்பத்தில்  வித்தியாசமான திருமணமுறை, பதவிப் போட்டிக்கு நடந்த கொலைகள் ஆகியவற்றை இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. நன்றி: தினதந்தி, 20/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more
1 2 3 4 5 6 8