எதிர் அரசியல் சினிமா

எதிர் அரசியல் சினிமா, ரதன், நிழல் பதிப்பகம், விலைரூ.150. கறுப்பின மக்கள் பற்றிய படங்களை பற்றி விமர்சிக்கும் சுருக்கமான கட்டுரைகளைக் கொண்டுள்ள நுால். கறுப்பின மக்கள், பல நிலைகளில் அடிமைகளாக நடத்தப்பட்டு இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஆப்ரிக்க கறுப்பின இளைஞர்கள் மீது, குற்றம் சுமத்தி வன்முறையாக கொல்லப்படுவதை ஒரு திரைப்படம் பதிவு செய்துள்ளது. வரலாற்றில் இருட்டடிப்புக்கு உள்ளாகிவரும் கறுப்பின திரைப்படங்கள் பற்றிய விபரங்களையும் தருகிறது. பிரபல இயக்குனர்கள் பீப்ல்ஸ், ஸ்பைக் லீ, வோல்கர் ஷ்லாண்டார்ப் போன்றோர் கறுப்பின மக்கள் பிரச்னையை மையமாக கொண்ட […]

Read more

எதிர் அரசியல் சினிமா

எதிர் அரசியல் சினிமா, ரதன், நிழல் பதிப்பகம், விலை: ரூ.150 உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்பைக் லீயின் ‘மால்கம் X’ திரைப்படத்தைப் பார்த்தவர்கள், கறுப்பினத் திரைப்படம் எப்படி ஒரு அரசியல் ஆயுதமாகப் புதிய இயக்குநர்களிடம் கைவரப்பெற்றுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இன்று உலக அளவில் மாற்றுத் திரைப்படம், இணை திரைப்படம், கலை திரைப்படம் ஆகியவை அரசியல் திரைப்படம் என்கிற ஒடுக்கப்பட்டவர்களின் குரலை முன்வைப்பதாக மாறியுள்ளன. இந்திய,தமிழ் சினிமாவில் தலித் சினிமா என்ற வகை உருவாகியிருப்பதைப் போல, உலக அளவில் கறுப்பின அரசியலை முன்வைக்கும் […]

Read more

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், நிழல் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. தமிழ் சமூக அழகியல், கலை, சமூக உணர்வை கட்டமைக்க தேவையான ஊடகம் சினிமா. அதற்கான அத்தனை கதவுகளையும் திறப்பதாக உள்ளது, தென் கொரிய சினிமா இயக்குனர், கிம் கி-டுக்கின் சினிமாக்களை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த நூல். நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

நூற்றாண்டை கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டை கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தான கிருஷ்ணன், நிழல் பதிப்பகம், பக். 140, விலை 150ரூ. குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் எராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா. அந்த அபூர்வக் கலைஞனைப் பற்றிய அரிய ஆவணப் பதிவே இந்நூல். 1936இல் ‘சதிலீலாவதி’யில் அறிமுகமாகி 1972-இல் ‘எல்லைக்கோடு’ வரை சுமார் 145 திரைப்படங்களைத் தாண்டி பயணித்த டி.எஸ்.பாலையா பற்றி இந்தத் தலைமுறையினர் மட்டுமல்லாமல் […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, நிழல் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழ் சினிமா உலகில் வரலாறு படைத்த சிறந்த நடிகர் டி.எஸ். பாலையா. தொடக்கத்தில் வில்லனாக நடித்து வந்த பாலையா, பின்னர் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றார். அவ்வளவு ஏன்? சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் அவருக்கு ஜோடி பத்மினி. சொந்தக் குரலிலும் பாடி இருக்கிறார் பாலையா. எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ள பாலையா இளைய தலைமுறையுடனும் நடித்துள்ளார். 100 படங்களுக்கு […]

Read more