நபிகளாரின் பொன்மொழிகள்
நபிகளாரின் பொன்மொழிகள், ஆலிம் பப்ளிகேஷன் பவுண்டேசன்; விலை:ரூ.650;
இறைவனின் அருள் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் பெரிதும் போற்றப்படுகின்றன. பெரும்பாலான நபி மொழித் தொகுப்புகள் இறைநம்பிக்கை, தூய்மை, தொழுகை எனப் பாடத்தலைப்புகளைக் கொண்டு அமைந்து இருக்கும். ஆனால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் தொகுத்த முஸ்னது அஹ்மத், இதில் இருந்து வேறுபட்டது.
இது நபித் தோழர்கள் பெயர்களால் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு நபித் தோழர் அறிவித்திருக்கும் நபிமொழிகளை ஒரே இடத்தில் காணலாம். மூன்றாம் பாகமாக வெளியாகி இருக்கும் இந்த நூல், எளிமையான தமிழாக்கம் உள்ளிட்ட பல வகையில் தனித்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.
நன்றி: தினத்தந்தி, 6/2/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818