எனது வாய்மொழி பதிவுகள்
எனது வாய்மொழி பதிவுகள், கி.ராஜநாராயணன், அன்னம், விலை:ரூ.300.
கரிசல்காட்டு இலக்கியவாதியான கி.ராஜநாராயணன், வார, மாத நாளிதழ்களுக்கும், செய்தியாளர்களுக்கும் அளித்த நேர்காணல்கள் அனைத்தும் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அவர் மனதில் புதைந்துள்ள ஆசாபாசங்கள், பலதரப்பட்ட மக்கள் பற்றிய அவரது புரிதல்கள், மற்ற எழுத்தாளர்கள் குறித்த அவரது கண்ணோட் டம் ஆகியவை இந்த நேர்காணல்களில் வெளிப் பட்டு இருக்கின்றன.
பள்ளிக்கூடமே செல்லாத அவர் கல்லூரி பேராசிரியரானது, எழுத்துலகில் அறிமுகம் ஆனது, கரிசல் பூமி மீது அவருக்கு உள்ள கரிசனம் ஆகிய அனைத்தையும் இந்த நூலில் காணமுடிகிறது. கி.ராஜநாராயணனை வெளிப்படையாகக் காட்டும் கண்ணாடிபோல ‘ இந்த நூல் திகழ்கிறது.
நன்றி: தினத்தந்தி, 20/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818