திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு

திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு, பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100 திருவள்ளுவரையும் திருமூலரையும் ஒப்பிட்டு கருத்துக்களை பதிவு செய்துள்ள நுால். திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் இறைவன் சிவபெருமானின் பெருமைகள் சுட்டப்படுகின்றன. ஆனால், உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறள், இந்த வரையறைக்குள் அடங்காமல், ஒழுக்க நெறியைக் காட்டுகிறது. கருப்பொருள்கள் பொதுவாக இருப்பினும் கருத்துக்கள் சற்று மாறுபட்டுள்ளன. ஒரு ஆய்வு நோக்கில் திருக்குறள் மற்றும் திருமந்திரத்தில் உள்ள பொதுவான 20 தலைப்புகளில் ஆராய்ந்து, ஒத்த கருத்துக்களையும், மாறுபட்ட கருத்துக்களையும் தொகுத்து அளித்துள்ளார். திருக்குறள், […]

Read more

கொரோனாவின் அவலங்களும் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளும்!

கொரோனாவின் அவலங்களும் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளும்!, பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170 கொரோனா தொற்றின் துவக்கம் முதல், எட்டாம் கட்ட ஊரடங்கு வரை நோய் பரவலையும், பாதிப்புகளையும் விளக்குகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளைக் கால வரிசையில் விவரிக்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள் செய்த மாற்று ஏற்பாடுகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன. எல்லா ஊடகங்களிலும் கொரோனாவின் பெயர் தான் பிரதானமாகக் காணப்படுகிறது. கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முக கவசம் […]

Read more

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும்

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும், பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. கொரோனா என்ற தீநுண்மி நோயால் உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். ஆண்டு தோறும், 30 நாட்கள் கட்டாய ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற பரிந்துரையுடன் முடித்துள்ளார். கொரோனா அச்சம் ஏற்பட்டதில் இருந்து, நடந்த எல்லா மாற்றங்களையும் தொகுத்துள்ளார். படங்களையும் இணைத்துள்ளார். மனிதாபிமானம் மற்றும் இயற்கை ஆர்வம் சார்ந்த கண்ணோட்டம் புத்தகம் முழுதும் உள்ளது. ஆய்வு பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. தொற்று நோய், உலகில் ஏற்படுத்திய மாற்றங்களை […]

Read more

வள்ளுவர் காட்டும் உவமைகள்

வள்ளுவர் காட்டும் உவமைகள்,  பு.சி. இரத்தினம்,  மணிமேகலை பிரசுரம், விலை 90ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு இல்லாத சிறப்புகளே இல்லை எனலாம். ஏழு சீர்களில், உலகமே வியக்கும் படியான பல கருத்துகளைக் கூறியுள்ள நுால் திருக்குறளாக இருப்பதால், பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீரிய கருத்துகளைக் கூற வந்த திருவள்ளுவர், அக்கருத்தை மேலும் தெளிவாக உணர, பல உவமைகளையும் கூறி விளக்குகிறார். உவமைகள் பாடல்களுக்கு மேலும் அழகு தருவதால், அவை அணிகளாகின்றன. பிறருக்கு உதவி செய்பவரிடம் உள்ள செல்வம், ஊர் நடுவே பயன்மரம் பழுத்தது போல […]

Read more