தலைத் தாமிரபரணி
தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா; விலை:ரூ.1000.
தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டுக்குள் ஓடி, கடலில் கலக்கும் புண்ணிய நதியான தாமிரபரணி தொடர்பான தகவல்கள் இந்த ‘நூலில் பொதிந்து கிடக்கின்றன. தாமிரபரணி தோன்றிய வரலாறு, அதன் குறுக்கே உள்ள கள், நீர்த்தேக்கங்கள், அருவிகள், இந்தப் பகுதியில் வாழ்ந்த அகத்தியர் பற்றிய செய்திகள், நதி தொடர்பான பழங்கதைகள், நதி செல்லும் வழியில் உள்ள ஆலயங்கள், முக்கிய ஸ்தலங்கள் போன்றவையும் இதில் தரப்பட்டு இருக்கின்றன.
ஒவ்வொரு கட்டுரையும் அது தொடர்பான புராணம் மற்றும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் கதை ஆகியவற்றையும் கொண்டு இருப்பதால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆர்வத்துடனும் விறுவிறுப்புடனும் படிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 6/2/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818