வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம், காவ்யா, சென்னை, விலை 1400ரூ.

கவிதை, உரைநடை, சினிமா பாடல், நாவல் என அனைத்து துறையிலும் தனக்கென தனி நடை வகுத்துக் கொண்டு இலக்கிய வானில் உச்சத்தைத் தொட்டவர் கவிபேரரசு வைரமுத்து. ஆண் பெண், சிறியோர் பெரியோர், படித்தோர்-பாமரர், உள்நாட்டினர்-வெளிநாட்டினர் என அனைத்துத் தமிழர்களும் உச்சி முகர்ந்து பாராட்டும் உன்னத கவிஞர் அவர். அவரது படைப்புகளை ஆய்வு செய்து எண்ணற்றோர் பி.எச்.டி. மற்றும் எம்.பில். பட்டங்களைப் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 300 பி.எச்டி ஆய்வேடுகளும் 700க்கும் மேலாக எம்.பில். ஆய்வேடுகளும் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. அதில் 30 பி.எச்டி ஆய்வேடுகள் மற்றும் 30 எம்.பில் ஆய்வேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட 60 ஆய்வுரைகள் அடங்கிய தொகுப்பே இந்த நூல். இந்த நூலைப் பேராசிரியர்கள் தே. ஞானசேகரன், காவ்யா சண்முகசுந்தரம் ஆகியோர் தொகுத்துள்ளனர். சங்க இலக்கியங்கள் குறித்த ஆய்வு எண்ணிக்கைக்கு அடுத்து தனித்த ஒரு படைப்பாளரின் படைப்புகள் அதிக எண்ணிக்கையில் ஆய்வு செய்யப்படுகிறது என்றால் அது கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பாகத்தான் இருக்கும். நன்றி: தினத்தந்தி, 20/8/2014.  

—-

கருத்துக்களஞ்சியம் 1008, பேரா. பி. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.

ஆக்கத்திற்கு ஊக்கம் தரும் கருத்துக்களின் தொகுப்பு நூல். படித்து பயன் பெறலாம். நன்றி: தினத்தந்தி, 20/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *