சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா
சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா, செ.திவான், அட்சரம் பதிப்பகம், விலை: ரூ.130,
கந்தர்வ கான கிட்டப்பா
கிராமபோன் இசைத்தட்டுகள் வெளிவந்த காலத்தில் இசை ரசிகர்களிடம் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் கிட்டப்பா.
சங்கரதாஸ் சுவாமிகளிடம் இசைப் பயிற்சி பெற்று இசைநாடக மேடைகளில் கதாநாயகனாக உலாவந்தவர், உச்ச ஸ்தாயியில் பாடுவதில் வல்லவர், கதர் உடுத்தி தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாளை இசையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு. நெல்லையைச் சேர்ந்த வரலாற்றறிஞர் செ.திவான், தன் மண்ணில் பிறந்த மாபெரும் இசைக்கலைஞருக்குச் செய்திருக்கும் மரியாதை இந்நூல்.
1934-ல் ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய ‘ஸ்ரீமான் கிட்டப்பா அவர்களின் ஜீவிய சரித்திரம்’ நூலுடன் கிட்டப்பாவைப் பற்றிய அரிய செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இசையறிஞர் விளாத்திக்குளம் சுவாமிகளைப் பற்றிய ஆவணப்படத்தையும் நூலையும் உருவாக்கிய என்.ஏ.எஸ்.சிவகுமார் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.
– புவி
நன்றி: தமிழ் இந்து, 6/4/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818