மேக்சிமம் சிட்டி
மேக்சிமம் சிட்டி: பாம்பே லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட், சுகேது மேத்தா, பெங்க்வின் புக்ஸ் இந்தியா, விலை: ரூ.399
இந்தியப் பொருளாதாரத்தின் தலைநகரமான மும்பை இன்றைய ஆஸ்திரேலியாவைவிட அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு பெருநகரமும்கூட. பலதரப்பட்ட மக்கள் பின்னிப் பிணைந்து வாழும் நகரம்.
அத்தகைய நகரத்தில் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, பின்னர் பதின்பருவத்தில் அங்கிருந்து வெளியேறி உலகின் தலைசிறந்த நகரங்கள் பலவற்றிலும் வாழ்ந்து 21 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிவந்த ஓர் இளைஞனின் பார்வையில், மும்பை நகரமும் அதன் உயிரோட்டமும் எவ்வித மாற்றமும் இன்றி எவ்வாறு தென்படுகிறது என்பதைக் கூறும் நூல் இது.
மும்பை நகரின் தனிச்சிறப்புகளை, அதனுடனான மக்களின் நெருக்கத்தை, சுயஅனுபவத்தோடு விவரிக்கும் இந்நூல், அபுனைவு பிரிவில் கிரியாமா விருதை வென்றது. அமெரிக்காவின் புலிட்சர் விருதுக்கான தேர்வுப் பட்டியலிலும் சுகேது மேத்தா இடம்பெற்றார்.
நன்றி: தமிழ் இந்து, 6/4/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818