அக்கா

அக்கா, திலகபாமா, காவ்யா, விலைரூ.600. ஐம்பதுகளின் இறுதியில், 23 வயதில் தமிழக அரசியலில் நுழைந்தவர் பொன்னம்மாள். காங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகள் பெரும் பங்கு ஆற்றியவர். ஏழு முறை சட்டசபை உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவர். அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சட்டசபையில் ஆற்றிய உரைகளையும் தொகுத்துள்ள நுால். காமராஜரை முதல்வராகக் கொண்ட ஆட்சியில் சட்டசபை உறுப்பினராகத் திகழ்ந்தார். நிதியமைச்சராக இருந்த கக்கன் கொண்டு வந்த வெள்ளை அறிக்கையை ஆதரித்து பேசினார். திராவிட நாடு என்ற முழக்கம் எழுந்தபோது எதிராகக் குரல் கொடுத்தவர். பெண்களுக்குப் […]

Read more

அக்கா

அக்கா,  ஏ.எஸ்.பொன்னம்மாளின் சட்ட மன்ற சரிதம், திலகபாமா, காவ்யா,  பக்: 586, விலை ரூ.600. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, ஓர் ஆதிதிராவிடர் நல விடுதியில் வார்டனாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் அரசியலில் நுழைந்து ஏழு முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து சாதனை படைத்த ஏ. எஸ். பொன்னம்மாளின் வாழ்க்கை வரலாறு, சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்த நூல். 1957-இல் முதன்முதலாக நிலக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றது, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கற்புக்கரசி கண்ணகி இறுதியில் தெய்வநிலை பெற்றாள். கேரள மாநிலம் மங்கல தேவி மலையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகி தேவி கோவிலைக் கட்டினான். மேலும் இதுபோல பல்வேறு பெயர்களில் கண்ணகி கோவில்கள் உள்ளன. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவரால் கண்ணகி வழிபாடு மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் ‘பகவதி’ என்று பயபக்தியோடு வணங்கப்படுகிறாள். இதேபோல் தமிழகத்திலும், ‘பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு’ என்று கூறுகின்ற இந்த நூலாசிரியர் […]

Read more