அக்கா
அக்கா, திலகபாமா, காவ்யா, விலைரூ.600.
ஐம்பதுகளின் இறுதியில், 23 வயதில் தமிழக அரசியலில் நுழைந்தவர் பொன்னம்மாள். காங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகள் பெரும் பங்கு ஆற்றியவர். ஏழு முறை சட்டசபை உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவர். அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சட்டசபையில் ஆற்றிய உரைகளையும் தொகுத்துள்ள நுால்.
காமராஜரை முதல்வராகக் கொண்ட ஆட்சியில் சட்டசபை உறுப்பினராகத் திகழ்ந்தார். நிதியமைச்சராக இருந்த கக்கன் கொண்டு வந்த வெள்ளை அறிக்கையை ஆதரித்து பேசினார். திராவிட நாடு என்ற முழக்கம் எழுந்தபோது எதிராகக் குரல் கொடுத்தவர். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று முழங்கியவர்; பலரது எதிர்ப்புகளுக்கிடையே மாவூத்து அணை கட்ட ஒத்துழைத்தவர்.
நிலக்கோட்டை, சோழவந்தான், பழநி தொகுதிகளில் சாலைகள், குளங்கள், பாலங்கள் அமைக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நுாலின் இரண்டாவது பகுதியில் அவர் ஆற்றிய சட்டசபை உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஹரிஜன மக்களுக்கான மானியம், விவசாயத்தில் புதிய அணுகுமுறை, பஞ்சாயத்து மசோதா, மின் வாரிய நிதிநிலை அறிக்கை, நில உச்சவரம்பு சட்டத்தை ஆதரித்தது போன்ற உரைகள் விரிவாக உள்ளன.
கிராமத்தில் பிறந்து, கல்வி கற்று சட்டசபை உறுப்பினராகி நற்பணிகளைச் செய்திருப்பதையும், ஏழைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதையும் அவரது உரைகளிலிருந்து அறிய முடிகிறது.
– ராம.குருநாதன்
நன்றி: தினமலர், 26/12/221.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%8f-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818