கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை முத்தையா, முல்லை பதிப்பகம், விலைரூ.50 வ.உ.சிதம்பரனார் 150ம் பிறந்த நாளை ஒட்டி, சிறப்பு வெளியீடாக வந்துள்ள நுால். வ.உ.சி., பற்றி பல அறிஞர்களின் தொகுப்பு நுால். இந்த நுாலில், 22 தலைப்புகள் உள்ளன. கவிஞர் பாரதி உட்பட பல தமிழறிஞர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் கூறிய, எழுதிய ஆக்கங்கள் இதில் உள்ளன. அவரது உயர்ந்த உள்ளத்தையும், தியாகத்தையும் சுட்டுகின்றன. பாதுகாக்கத்தக்க ஆவணமாக உள்ளது. – வசந்தன் நன்றி: தினமலர், 24/10/22.. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார் மன்னன், விவேகா பதிப்பகம், விலைரூ.145. வித்தியாசமான 50 கோவில்கள் பற்றியும், அவற்றின் வழிபாட்டு முறை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்த நுாலில், அந்தச் சுவாமிகளின் படத்தையும் தெளிவான தகவல் கொண்ட நுால். இதில் இடம்பெற்றுள்ள கோவில்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரத்தில் உள்ளவை. கல்வராயன் மலையில் ராமனைக் கரியராமன் என்று குறிப்பிடுகின்றனர். கல்வெட்டையும் கடவுளாக வணங்குகின்றனர். அந்தக் கல்வெட்டை வணங்கினால் நோய் தீர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையும் இந்தப் பகுதியில் நிலவுகிறது. ஓர் ஊரில் எட்டுக்கை அம்மன் சிலை 45 அடி […]

Read more

ஒளரங்கசீப்

ஒளரங்கசீப், ஆங்கிலத்தில்: ஆட்ரே ட்ரஷ்கெ, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.158, விலை  ரூ.200. முகலாயப் பேரரசர்களில் மிகக் கொடூரமானவராகச் சித்திரிக்கப்பட்டவர் ஒளரங்கசீப். உண்மையில் ஒளரங்கசீப் கொடூரமானவரா என்பதை இந்நூல் ஆராய்கிறது. அமெரிக்க வரலாற்றாசிரியரான ஆட்ரே ட்ரஷ்கே, இது குறித்து பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், ஒளரங்கசீப் பற்றி கூறப்படும் பல குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற முடிவுக்கு வருகிறார். ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன என்று கூறுவது உண்மையல்ல என்று கூறும் நூலாசிரியர், அவருடைய ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் எண்ணிக்கை பத்து […]

Read more

நெடுமர நிழல் கதைகள்

நெடுமர நிழல் கதைகள், ஜெயராமன் ரகுநாதன், எழுத்து பிரசுரம், விலைரூ.200 காட்சிகளால் கோர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நிஜத்தில் மிதக்கும் கீழ்மை எண்ணங்களை சுவாரசியமாக அலசுகிறது. பொருள் ஆர்வத்தில் ஆடும் மன ஊஞ்சல்களை கண் முன் நிறுத்துகிறது. இந்த தொகுப்பு, 24 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. பல சூழ்நிலைகளில் வாழும் மனிதர் மனதில் மிளிரும் வண்ணங்களை குழைத்து, வினோதமாக கண்ணில் காட்டுகிறது. கதாபாத்திரங்கள் இயல்பாக கலக்கின்றன. அவை காட்சி மயமாகி சிந்தனையில் நுழைகின்றன; ஸ்தம்பிக்க வைக்கின்றன. மன வக்கிரங்களின் கோணங்களை முகத்தில் அறைகின்றன; யதார்த்த உலகத்தை […]

Read more

பணம் தரும் மந்திரம்

பணம் தரும் மந்திரம் – உங்களை செல்வந்தராக மாற்றும் எளிய வழிகாட்டி,  எஸ்.கே.முருகன், விகடன் பிரசுரம்,  பக்.176, விலை  ரூ.125. பணம் சம்பாதிப்பது என்பது மனித வாழ்க்கையின் ஓர் அடிப்படைத் தேவையாகிவிட்டது. பணமின்றி ஓரணுவும் அசையாது. ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் எவை? பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்துவிடலாமா?என்பன போன்ற கேள்விகளுக்கு மிக எளியமுறையில் பதில் சொல்கிறது இந்நூல். பணம் சம்பாதித்து வாழ்வில் உயர்நிலையில் உள்ள திருபாய் அம்பானி, பங்குச் சந்தையில் உச்சம் தொட்ட வாரன் எட்வர்ட் பஃபெட், தன்னுடைய […]

Read more

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்-தத்துவம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்-தத்துவம், சாமி சிதம்பரனார், அழகு பதிப்பகம், பக்.160, விலை ரூ.160. “தமிழில் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய வைத்தியக் கலைதான் சித்த வைத்தியக் கலை. சித்தர்களின் வைத்தியக் கலைக்கு நிகரான கலையுடன் வேறு எந்த வைத்தியக் கலையையும் ஒப்பிட முடியாது. பொதுமக்கள் நோயின்றி வாழ்வதற்காகவே சித்தர்கள் தமது வைத்தியக் கலையை வளர்த்தனர்’ என்றும்; “சித்தர்களின் நூல்களிலே பரிபாஷைகள் பல காணப்படுகின்றன. அவற்றைப் படிக்கும் புலவர்களோ, பொதுமக்களோ அவற்றின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியாது. பரம்பரையாக சித்தர் நூல் பயிற்சி உள்ளவர்கள்தாம், அவற்றின் உண்மைப் […]

Read more

மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை

மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை, பேரா.சோ.மோகனா, பாரதி புத்தகாலயம், விலை: ரூ.120. போராட்டமே வாழ்க்கை ஆணுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிற அனைத் தையும் பெண் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. பேராசிரியர் மோகனாவும் போராடித்தான் வென்றிருக்கிறார். கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவருக்குக் கல்வி பெறுவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. தன்னை மூழ்கடிக்க முயன்ற ஒவ்வொரு சவாலையும் துணிவோடு எதிர்கொண்டு களமாடினார். அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம், பெண்கள் இயக்கம், தொழிற்சங்கம் என்று பல்வேறு அமைப்புகளில் பங்கேற்றுக் களப்பணியாற்றிவர், புற்றுநோயிலிருந்தும் போராடி மீண்டார். தான் கடந்துவந்த […]

Read more

மூளைக்குள் வாருங்கள்

மூளைக்குள் வாருங்கள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.212, விலை ரூ.220. புலன்களின் மூலமாக மூளைக்குள் செல்லும் தகவல்கள் எல்லாம் மூளையில் பதிய வைக்கப்படுவதில்லை. நிறைய தகவல்களை மூளை வீணடித்துவிடுகிறது. தகவல்களை சரி பார்க்காமலேயே சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தகவல்களை எடிட் செய்து தனக்குள் பதிந்து வைத்துக் கொள்கிறது. அவகாசம் கொடுத்தால் மூளை சரியாக தர்க்கம் செய்யும். அவசரப்படுத்தினால் மூளை குறுக்கு வழியைக் கடைப்பிடிக்கும். மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் – டெம்போரல் லோப் இரண்டும் சேர்ந்துதான் தற்காலிக நினைவுகளை வைத்திருக்கின்றன. இப்பகுதி சேதமடைந்தால் பார்த்தது, கேட்டது […]

Read more

101 கேள்விகள் 100 பதில்கள்

101 கேள்விகள் 100 பதில்கள், முனைவர் சு.தினகரன், அறிவியல் வெளியீடு, விலைரூ.80. பொதுமக்களிடையே அறிவியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள நுால். கேள்வி – பதில் பாணியில், அறிவியலுக்கு விளக்கங்கள் அமைந்துள்ளன. சாதாரணமாக அன்றாடம் எழும் கேள்விகளை, மிக எளிமையாக விளக்கி புரிய வைக்கிறது இந்த நுால். மழை நேரத்தில் எவ்வாறு கொசு சமாளிக்கிறது என்ற கேள்விக்கு தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சூழலியலை மிக எளிய அறிவியல் உண்மைகள் மூலம் விளக்குகிறது. அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால். நன்றி: தினமலர், 31/10/21 இந்தப் […]

Read more

இவர்தான் லெனின்

இவர்தான் லெனின் (கட்டுரைகள், கதைகள், குறிப்புகள்),  பூ.சோமசுந்தரம், ஜீவா பதிப்பகம், பக்.264, விலை ரூ.220. ரஷ்ய பொதுவுடைமை இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சிக்கும் தலைமை தாங்கிய பெருமைக்குரியவர் வி.இ.லெனின். அவருடன் பழகியவர்கள் லெனினுடனான தமது அனுபவங்களை கட்டுரைகளாக, கதைகளாக, வாழ்க்கைக் குறிப்புகளாக எழுதி இருக்கிறார்கள். அவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. லெனின் மிகப் பெரிய தலைவராக இருந்தபோதிலும், ரஷ்யாவில் வாழும் மிகச் சாதாரணமான ஏழை மக்களின் வாழ்க்கை குறித்து மிக அதிகமான கவனம் கொண்டிருந்தது; ஏழை மக்களுடன் நெருங்கிப் பழகியது; அவர்களின் நலன் என்கிற நோக்கில் […]

Read more
1 2 3 4 23