தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. இந்தியப் பகுதியில்தான் பூர்வ குடிகள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன. தொல் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, பெருகியதும் இந்தியாவில்தான்; மனிதனும் அங்குதான் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கி.மு. நான்காயிரம் ஆண்டுகள் வரை இந்தியா முதல் பாரசீகம், எகிப்து, சைப்ரஸ், கிரேத்தா வரையில் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்தனர்; தென் பகுதியில் வாழ்ந்த மக்களே வடக்கிலும் இன்ன பிற இடங்களிலும் சென்று குடியேறினர். இந்த உலகில் இல்லாத ஒரு நிலப்பரப்பு […]

Read more

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ!

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ!, ப.பாலசுப்பிரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.90 ஆணவக் கொலைகளை கொலை செய்ய, வாளை துாக்குவது போல் வந்துள்ள நாவல். நாவலை நடத்திச் செல்லும் போது, இந்தியாவில் நடந்த ஆணவக் கொலைகளை பட்டியல் இட்டு ரத்தக் கண்ணீர் வர வைக்கிறார். ஆணவக் கொலை செய்ய நினைக்கும் ஒருவரின் மனதை மாற்ற, பத்திரிகையாளர் முயற்சி எடுக்கிறார். ஆணவக் கொலை செய்து, துாக்குத் தண்டனைக்கு காத்திருக்கும் கைதியை சந்திக்க வைக்கிறார். அந்த கைதி ஆணவக் கொலையின் கேடுகளை விளக்க, மனம் மாறி இளம் ஜோடிக்கு […]

Read more

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் (சமூக நாவல்), ப.பாலசுப்பிரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.65 குடிப்பழக்கத்தால் விளையும் கேடுகளை சித்தரிக்கும் நாவல். ‘தினமும் குடிப்பேன்; நீ தான் அடங்கிப் போகணும்’ என்கிற தோரணையில் அருணாவின் கணவன் வினோத் நடக்கிறான். அதனால் கணவனைப் பிரிகிறார்; ஆனால் நிலை குலைந்து விடவில்லை. மகளை வளர்த்து ஆளாக்குவதிலும், ஐ.ஏ.எஸ்., படிக்க வைத்து கலெக்டர் ஆக்குவதிலும் ஆத்ம திருப்தியும், ஆத்ம பலமும் கிடைக்கின்றன. கல்வித் திட்டத்தில் ஆன்மிக வளர்ச்சிக்கும் பாடத் திட்டம் வேண்டும் என்று மகளை வற்புறுத்துகிறார். சமூக சீர்திருத்த நாவல்! – […]

Read more

இனிய இணையதள நூலகம்

இனிய இணையதள நூலகம், ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 110ரூ. நூலகம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழக அரசுதான் 1948 ம் ஆண்டு சென்னைப் பொது நூலக சட்டத்தை இயற்றி நூலகப் பணிகளைச் சீராக்க முயற்சி மேற்கொண்டது என்பது போன்ற பல செய்திகள் இந்த நூலில் இருக்கின்றன. நூலகப் பணிக்கு இணையதளம் எவ்வாறு பயன்படுகிறது? தமிழ் இணையம் எவ்வாறு செயல்படுகிறது? மின் நூல் எனப்படுவது என்ன? என்பது போன்ற பல விவரங்கள் நன்றாகத் தொகுத்துத் தரப்பட்டு […]

Read more

தமிழினத்தின் துருவ நட்சத்திரம்

தமிழினத்தின் துருவ நட்சத்திரம், ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 100ரூ. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி பதவியில் ஒவ்வொரு நிலையாக எப்படி கடந்து வந்தார் என்று விவரமாக தரப்பட்டுள்ளது. அத்துடன் அவர், சென்னை மாநகர மேயராகவும்,தமிழகத்தின் துணை முதல்வராகவும் இருந்த சமயங்களில் ஆற்றிய ஆக்கப்பூர்வமான பணிகள் பற்றிய விவரமும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027643.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 […]

Read more

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரும், சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான மனோன்மணியம் சுந்தரனாரை பற்றிய நூல் இது. அவரது இளமைக்காலம் மற்றும் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளுடன், சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் கவிதை நாடகம் குறித்தும் சிறப்பாக விவரித்துள்ளார் ஆசிரியர். தனது அறிவுத்திறமையால் சுவாமி விவேகானந்தருடன் விவாதம் நடத்தி அவரை தனது நண்பராக்கிய சுந்தரனாரின் திறமையும், தமிழை அன்னையாக கருதிய அவரது மாண்பும் வியக்க வைக்கிறது. பாரதிதாசன், கவிமணி, […]

Read more

நூலக வளர்ச்சியில் இந்தியா

நூலக வளர்ச்சியில் இந்தியா, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.104, விலை 55ரூ. நூலகராக பணியாற்றும், இந்நூலாசிரியர் தம் ஆய்வின் போது கிடைத்த நூலகம் பற்றிய தகவல்களை தொகுத்து இந்நூலை படைத்துள்ளார். சங்க காலம் துவங்கி, இன்றைய நிலை வரை சுவடி நூலகங்கள், அரசு, தனியார், மடாலயம், பள்ளி, கல்லூரி, பொது நூலகங்கள் என, பல வகை நூலகங்களின் செயல்பாடுகளை விவரித்துள்ளார். சரபோஜி மன்னர், 1820ல் தஞ்சையில் உருவாக்கிய, சரசுவதி மகால் நூலகம், 1890ல், கன்னிமாரா உருவாக்கிய சென்னை கன்னிமாரா நூலகம், 1903ல் கர்சன் பிரபு […]

Read more