இனிய இணையதள நூலகம்
இனிய இணையதள நூலகம், ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 110ரூ.
நூலகம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழக அரசுதான் 1948 ம் ஆண்டு சென்னைப் பொது நூலக சட்டத்தை இயற்றி நூலகப் பணிகளைச் சீராக்க முயற்சி மேற்கொண்டது என்பது போன்ற பல செய்திகள் இந்த நூலில் இருக்கின்றன.
நூலகப் பணிக்கு இணையதளம் எவ்வாறு பயன்படுகிறது? தமிழ் இணையம் எவ்வாறு செயல்படுகிறது? மின் நூல் எனப்படுவது என்ன? என்பது போன்ற பல விவரங்கள் நன்றாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. கல்வித் துறையில் இணைய பயன்பாடு, கணினித் தமிழ் ஆகியவை பற்றியும் கூறும் இந்த நூலில், சான்றோர்களின் வாசிப்புப் பழக்கம் பற்றிய தகவல்களும் உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 9/10/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818