மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 100ரூ.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரும், சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான மனோன்மணியம் சுந்தரனாரை பற்றிய நூல் இது. அவரது இளமைக்காலம் மற்றும் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளுடன், சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் கவிதை நாடகம் குறித்தும் சிறப்பாக விவரித்துள்ளார் ஆசிரியர்.
தனது அறிவுத்திறமையால் சுவாமி விவேகானந்தருடன் விவாதம் நடத்தி அவரை தனது நண்பராக்கிய சுந்தரனாரின் திறமையும், தமிழை அன்னையாக கருதிய அவரது மாண்பும் வியக்க வைக்கிறது. பாரதிதாசன், கவிமணி, ராஜாஜி, உள்ளிட்ட பேரறிஞர்கள் சுந்தரனாரை பாராட்டி எழுதிய உரைகளும் நூலில் சேர்க்கப்பட்டு இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 24/10/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027294.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818