தமிழ் இந்தியா
தமிழ் இந்தியா, ந.சி.கந்தையா பிள்ளை, சங்கர் பதிப்பகம், விலைரூ.275
தமிழர்களின் நாகரிகம், இந்தியாவின் பழைய நில அமைப்பு பற்றிய புகழ் வாய்ந்த நுால்.
சிந்து சமவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் 1921ல் கண்டறியப்பட்டன. அங்கு கிடைத்த பழம் பொருள்களை ஆராய்ந்து, அங்கு வாழ்ந்தோர் தமிழர்கள் என்றும், அவர்கள் நாகரிகம், மெசபடோமியா எகிப்து பழைய நாகரிகங்களை ஒத்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். புத்தருக்குப் பின் இந்திய அரசாங்க அமைப்பு, தத்துவ சாஸ்திரிகள், பாடலிபுத்திரம் போன்றவை குறித்தும் சொல்கிறார்.
தமிழ்மொழியில் வெளிவராத பல அரிய செய்திகள் அடங்கிய கருத்துக் கருவூலமாக திகழ்கிறது. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நுால்.
– புலவர் சு.மதியழகன்
நன்றி: தினமலர், 10/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000032962_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818