எங்க வாத்தியார்
எங்க வாத்தியார், கொற்றவன், வானதி பதிப்பகம், பக். 728, விலை ரூ.500.
முதல்வர் எம்ஜிஆர் மறைந்து, 35 ஆண்டுகளாகியும் தமிழர்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தபோதிலும், எந்தப் புத்தகத்திலும் இல்லாத பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எம்ஜிஆரோடு நடித்த நடிகைகள், திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 29 பேரிடம் பேட்டி கண்டு, நூலாசிரியர் அதை பிரசுரம் செய்துள்ளார்.
கடையெழு வள்ளல்கள் இருந்திருப்பது நமக்குத் தெரியும். ஆனால், நம்காலத்தில் அவர்களுக்கு இணையாக வாழ்ந்த வள்ளலாக, எம்ஜிஆர் இருந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. திரையுலகில் அவர் நிகழ்த்திய சாதனைகள், அரசியல் அரங்கில் திமுக ஆட்சியைப் பிடிக்க அவர் ஆற்றிய பணிகள், அதிமுகவை தொடங்கியதும் ஆட்சியைப் பிடிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் என ருசிகரமான பல தகவல்கள் இருக்கின்றன.
‘அடிமைப் பெண்’ படத்தில் அவர் சிங்கத்தோடு சண்டையிட்டது உண்மையா என்று அந்தக் காலத்தில் ரசிகர்களிடையே உரையாடல்கள் நிகழ்ந்தது வியப்பூட்டுகின்றது.
முதல்வராக இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகள், தன்னை நம்பியவர்களுக்கு அவர் செய்த உதவிகள் வியக்க வைக்கின்றன.
எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமல்ல; அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய நூல் இது!
நன்றி: தினமணி, 14/3/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818