புகழ்க் கம்பன் தந்த இராமாயணம்
புகழ்க் கம்பன் தந்த இராமாயணம், சக்திதாசன் சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை:ரூ.400.
கம்ப ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும், அவற்றுக்கு, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான விளக்கமும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஒவ்வொரு பாடலிலும் உள்ள அருஞ்சொற்களுக்கு விளக்கமும் தந்து இருப்பதால் பாடலின் முழுக் கருத்தையும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.
புத்தகத்தின் முன்னுரையாக, கம்பர் காலம் எது? அவரது சொந்த ஊர் எங்கே இருந்தது? ராமாயண காவியத்தை கம்பர் இயற்றியது ஏன்? என்பது போன்ற விவரங்கள் அடங்கிய பெரிய கட்டுரை ஆராய்ச்சி நோக்கில் தரப்பட்டு இருக்கிறது. அதில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 13/2/22
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818