வாழ்க்கைக்குத் தேவை விழிப்புணர்வு
வாழ்க்கைக்குத் தேவை விழிப்புணர்வு, எம். கருணாநிதி, மணிமேகலைப் பிரசுரம், விலை:ரூ. 175.
மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை, ரசித்துப் படிக்கும் வகையில் நகைச்சுவை கலந்து எழுதி இருப்பவர் தமிழகக் காவல்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் என்பது வியப்பளிக்கிறது.
காவல்துறைக்கு முற்றிலும் மாறான மென்மையான போக்குடன் அவர் தெரிவித்து இருக்கும் ஆலோசனைகள், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகை யில் இருக்கின்றன.
மாமியார்-மருமகள் உறவு, பேருந்து பயணத்தில் மாணவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பது, போதை மருந்து, சமூக விரோதிகள், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றின் ஆபத்து, அவசர முடிவில் தற்கொலை முடிவு கூடாது என்பதுபோன்ற கருத்துகள், ருசிகரமான கதைகளுடன் தரப்பட்டு இருப்பதால், மக்கள் மனதில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நன்றி: தினத்தந்தி, 13/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818