வேடிக்கை வினோதக் கதைகள்

வேடிக்கை வினோதக் கதைகள், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சன்னை 17, விலை 350ரூ. பெரியவர்களுக்கு கவுசிகள் என்ற பெயரிலும், சிறுவர்களுக்கு வாண்டு மாமா என்ற பெயரிலும் கதை எழுதும் வி.கே. மூர்த்தி,இப்போது சிறுவர்களுக்காக பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜா ராணி கதைகள், மந்திராவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள் இப்படி பலதரப்பட்ட கதைகள் இதில் உள்ளன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட கதைகள், சுவையும், விறுவிறுப்பும் மிக்க கதைகள். சிறுவர் சிறுமிகள் கையில் எடுத்தால், படித்து […]

Read more

மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை)

மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை), சித்திரக்கதையாக்கம் படம் – காலேப் எல். கண்ணன், வசந்தா பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 50ரூ (ஒவ்வொரு புத்தகமும்). படக்கதையில் விஞ்ஞானிகள் வெறும் கதைகளைவிட சித்திரக்கதைகள் மாணவர்களை அதிகம் கவரும். மேரிக்யூரி, ஆர்க்கிமிடிஸ், அலெக்சாந்தர் பிளமிங், லூயி பாஸ்டியர் ஆகிய விஞ்ஞானிகளின் வரலாறுகள், கண்கவரும் வண்ணப்படங்களுடன், சித்திரக்கதைப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆர்ட் காகிதத்தில், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகங்கள் அமைந்துள்ளன. மாணவ-மாணவிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற புத்தகங்கள்.   […]

Read more