வேடிக்கை வினோதக் கதைகள்

வேடிக்கை வினோதக் கதைகள், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சன்னை 17, விலை 350ரூ.

பெரியவர்களுக்கு கவுசிகள் என்ற பெயரிலும், சிறுவர்களுக்கு வாண்டு மாமா என்ற பெயரிலும் கதை எழுதும் வி.கே. மூர்த்தி,இப்போது சிறுவர்களுக்காக பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜா ராணி கதைகள், மந்திராவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள் இப்படி பலதரப்பட்ட கதைகள் இதில் உள்ளன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட கதைகள், சுவையும், விறுவிறுப்பும் மிக்க கதைகள். சிறுவர் சிறுமிகள் கையில் எடுத்தால், படித்து முடிக்கும்வரை கீழே வைக்கமாட்டார்கள். நன்றி: தினத்தந்தி, 20/11/13.  

—-

 

மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை), ஆர்க்கிமிடிஸ், லூயி பாஸ்டியர், மேரி க்யூரி, அலெக்சாண்டர் ஃப்ளெமிங், காலேப் எல். கண்ணன், வசந்தா பிரசுரம், புதிய எண்-15, பழைய எண்-6, ஜெய் சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, தலா 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-660-7.html

கதைவழி கல்வி சிறுவயதில் சித்திரக்கதைகள் படிப்பது குழந்தைகளது கற்பனை உலகத்தை விஸ்தரிக்கிறது. அவர்கள் பொதுவாக பள்ளியில் சுவாரசியமின்றி படிக்கும் அறிவியலையும், விஞ்ஞானக் கோட்பாடுகளையும்கூட சித்திரக் கதைகள் சுவாரசியமாக்க முடியும். அதற்கு காலேப் எல். கண்ணன் எழுதியிருக்கும் இந்த சித்திரக் கதை நூல்களே சாட்சி. ஆர்க்கிமிடிஸ், மேரி க்யூரி, அலெக்சாந்தர் ஃப்ளெமிங், லூயி பாஸ்டியர் ஆகியோரின் சுருக்கமான வரலாறு, சித்திரக் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அந்த விஞ்ஞானிகளின் பிறப்பு, இளமைப்பருவம், சமூக, வரலாற்று, அரசியல் சூழல், முக்கியமான கண்டுபிடிப்புகள், இறுதி வாழ்க்கை என்று இந்நூல் அமைந்துள்ளது. தங்கள் வாழ்நாள் முழுக்க சொந்த சுகங்களையும் முற்றிலும் துறந்து ரேடியத்தைக் கண்டுபிடித்த பியரி க்யூரி, மேரி க்யூரி தம்பதியினர் ரேயத்தாலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டனர். பியரி க்யூரி மரணமடைகிறார். ஆர்க்கிமிடிஸ் விதி உருவான கதை தெளிவாகச் சொல்லப்படுகிறது. எல்லா விஞ்ஞனிகளின் பங்களிப்புகளைச் சொல்லும் அதே நேரத்தில் அவர்களின் பங்களிப்புகள் எதிர்காலத்தில் வந்த விஞ்ஞானிகளுக்கு எப்படி பயன்பட்டன என்றும் கூறப்படுகிறது. கதைகளையும், படங்களையும் சேர்த்து உருவாக்கியுள்ளார் ஆசிரியர் காலேப் எல். கண்ணன். இதைப்போல நவீன விஞ்ஞானத்துக்கு பங்களித்த ஆளுமைகள் அனைவரின் கதைகளும் சித்திரக் கதைகளாக வெளிவந்தால் குழந்தைகள் பெரிதும் பயன்பெறுவார்கள். 32 பக்கங்கள் கொண்ட ஒவ்வொரு நூலின் விலையும் 50ரூபாய். நன்றி: தமிழ் இந்து, 24/11/13.

Leave a Reply

Your email address will not be published.