பறவைகள்
பறவைகள், அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆசை, க்ரியா.
ஒரு வித்தியாசமான பறவையைப் பார்க்கிறீர்கள். அது என்ன வகை, அதன் பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் இந்த நூல் கைகொடுக்கும். பறவைகளின் அடையாளம், பறவைகளின் பெயர்கள் குறித்த குழப்பங்களைத் தீர்க்கும்வகையில் படங்களும், பெயர்களும் தரப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, 22/4/2014.
—-
தமிழரும் தாவரமும், கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
தமிழர் பண்பாட்டில் பண்டைக்காலம் தொட்டுத் தாவரங்கள் பெற்றுவந்த முக்கியத்துவம், பண்பாட்டுத் தொடர்புகள், பெற்ற பொருளாதார நலன்களை விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கும் நூல். தாவரங்களுக்கான சரியான தமிழ்ப் பெயர்களைத் தந்திருப்பதன் மூலம், அறிவியல் தமிழ் செல்ல வேண்டிய திசையைக் காட்டிய நூல்களுள் ஒன்று. நன்றி: தி இந்து, 22/4/2014.