அழுததும் சிரித்ததும்

அழுததும் சிரித்ததும், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ. கதைகளாக வேண்டிய கட்டுரைகள் யுகமாயினி இதழில் பேரா. க. பஞ்சாங்கம் எழுதிய பத்திக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். உண்மையில் பஞ்சாங்கம் பொறுமையைக் கைக்கொள்ளாமல் ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மிக மிக நல்ல சிறுகதைகளாகவோ நாவல்களாகவோ வந்திருக்க வேண்டிய பல கதைகள் வெறுமனே கட்டுரைகளாகக் கலைந்துவிட்டன. ஆசிரியர் கட்டுரையாகச் சொல்லும்போதே ஒரு பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களுமாய் இருக்கின்றன. சிறுகதை உலகம் பல அரிய முத்துக்களை இழந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. […]

Read more